ஷாங்காய் அமைப்பு கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியிட்ட வரைபடம்; இந்தியா வெளிநடப்பு

ஷாங்காய் அமைப்பு கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியிட்ட வரைபடம்; இந்தியா வெளிநடப்பு

1 mins read
368876c1-6df1-43a2-8144-c3ab7cb21a93
பாகிஸ்­தா­னின் இந்­தச் செயல்­பாடு அப்­பட்­ட­மான அத்துமீறல் என மத்­திய வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் அனு­ராக் ஸ்ரீவஸ்­தவா தெரி­வித்­துள்­ளார். படம்: ஊடகம் -

தீவி­ர­வா­தி­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிப்­பதை பாகிஸ்­தான் பிர­த­மர் இம்­ரான்­கான் பெரு­மை­யு­டன் ஒப்­புக்­கொண்­டுள்­ளார் என இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யப் பகு­தி­களை இணைத்து பாகிஸ்­தான் வெளி­யிட்ட வரை­ப­டத்­துக்கு இந்­தியா கடும் கண்­ட­ன­மும் தெரி­வித்­துள்­ளது.

மேலும் மாஸ்­கோ­வில் நடை­பெற்ற ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்­புக் கூட்­டத்­தி­லி­ருந்து இந்­தி­யப் பிர­தி­நிதி வெளி­ந­டப்பு செய்­தார்.

ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்­பின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர்­கள் மாநாடு ரஷ்யா தலை­மை­யில் நடை­பெற்­றது. இதில் இந்­தியா, பாகிஸ்­தான் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளின் பிர­தி­நி­தி­கள் பங்­கேற்­ற­னர். கூட்­டத்­தின்­போது பாகிஸ்­தான் பிர­தி­நிதி இந்­தி­யா­வின் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களை பாகிஸ்­தா­னின் பகு­தி­க­ளா­கக் காட்­டும் வரை­படத்­தைப் பயன்­ப­டுத்­தி­னார்.

இத­னால் கடும் அதி­ருப்தி அடைந்த இந்­தியா அந்­தக் கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்­தது.

பாகிஸ்­தா­னின் இந்­தச் செயல்­பாடு அப்­பட்­ட­மான அத்துமீறல் என மத்­திய வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் அனு­ராக் ஸ்ரீவஸ்­தவா தெரி­வித்­துள்­ளார்.

கூட்­டத்தை நடத்­தும் தலை­மை­யின் ஆலோ­ச­னையை அப்பட்­ட­மா­கப் புறக்­க­ணிப்­பது விதி­மு­றை­களை மீறிய செயல் என்­றும் பாகிஸ்­தா­னின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து வெளி­ந­டப்பு செய்­வ­தற்கு முன் இந்­தி­யத் தரப்­பில் உரிய ஆலோ­சனை நடத்­தப்­பட்­டது என்­றும் அனு­ராக் ஸ்ரீவஸ்­தவா தெரி­வித்­தார்.