செல்லப்பூனை 'கேட்டி'க்கு வளைகாப்பு; 4 குட்டிகளுடன் தாயும் நலம்

செல்லப்பூனை 'கேட்டி'க்கு வளைகாப்பு; 4 குட்டிகளுடன் தாயும் நலம்

1 mins read
2edc8a64-1b7a-4a2d-8a36-ce1ae3f12a2f
பூனை 'கேட்டி'க்கு மாலையிட்டு, 7 வகையான தட்டுகளில் நலங்கு பொருட்கள், பூனைக்கு பிடித்த உணவுகளை வைத்து இந்த வளைகாப்பை நடத்தியுள்ளார் வசந்தா. -
multi-img1 of 2

பாண்டிச்சேரியில் மூலக்குளத்தில் வசிக்கும் வசந்தா பூனை ஒன்றை கடந்த ஓராண்டாக வளர்த்து வருகிறார்.

தனது செல்லப்பிராணிக்கு 'கேட்டி' என்று பெயரிட்டிருந்தார் அவர். 'கேட்டி' கருவுற்றது.

அவ்வபோது கேட்டியுடன் விளையாடும் வசந்தாவின் பேத்திகள் கேட்டிக்கு வளைகாப்பு நடத்த விரும்பியதாகவும், தனது செல்லப் பூனைக்கு வசந்தா வளைகாப்பு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பூனை 'கேட்டி'க்கு மாலையிட்டு, 7 வகையான தட்டுகளில் நலங்கு பொருட்கள், பூனைக்கு பிடித்த உணவுகளை வைத்து இந்த வளைகாப்பை நடத்தியுள்ளார் வசந்தா.

கடந்த செவ்வாயன்று அந்தப் பூனை அழகாக 4 குட்டிகளை ஈன்றது.

வளைகாப்பு நிகழ்வு, குட்டிகளுடன் உள்ள பூனை 'கேட்டி' ஆகியவற்றைக் காட்டும் படங்களை வசந்தாவின் மகன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்