தெற்கு ரயில்வே பணி: தமிழில் தேர்வு எழுதியோர் புறக்கணிப்பு

தெற்கு ரயில்­வே­யில் தொழில்­நுட்ப வல்­லு­ந­ருக்­கான தேர்­வை தமி­ழில் எழு­தி­ய­வர்­களில் 5.4 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே பணி கிடைத்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக தமி­ழக எம்பி வெங்­க­டே­சன் நேற்று முன்­தி­னம் மக்­க­ள­வை­யில் கேள்வி எழுப்­பி­னார். இதற்­குப் பதி­ல­ளித்த ரயில்வே அமைச்­சர் பியூஷ் கோயல், தெற்கு ரயில்­வே­யில் தொழில்­நுட்ப வல்­லு­நர் பணிக்கு இந்­தி­யில் தேர்வு எழு­தி­ய­வர்­களில் 66 விழுக்­காட்­டி­னர் தேர்­வாகி உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

“மொத்­த­முள்ள 2,086 பணி­யி­டங்­களை நிரப்ப தேர்வு நடை­பெற்­றது. அவற்­றுள் 1,686 இடங்­களை இந்­தி­யில் தேர்வு எழு­தி­ய­வர்­கள் பெற்­றுள்­ள­னர். தமி­ழில் தேர்வு எழு­தி­ய­வர்­களில் 139 பேர் மட்­டுமே தொழில்­நுட்ப வல்­லு­நர் பணிக்­குத் தேர்­வா­கி­னர். இது மொத்த பணி­யி­டங்­களில் 5.4 விழுக்­காடு,” என்­றார் அமைச்­சர் பியூஷ் கோயல்.

தெற்கு ரயில்­வே­யில் உள்ள வேலை வாய்ப்­பு­களில் தமி­ழர்­கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வ­தாக தொடர்ந்து புகார்­கள் எழுந்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் அண்­மை­யில் தெற்கு ரயில்­வே­யின் சரக்கு வண்டி பாது­கா­வ­லர் பணி­யி­டங்­களை நிரப்ப துறை சார்ந்த தேர்வு நடை­பெற்­றது. இதி­லும் தமி­ழர்­கள் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தாக அதி­ருப்தி நில­வு­கிறது.

96 பணி­யி­டங்­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட தேர்­வில் தெற்கு ரயில்­வே­யில் பணி­பு­ரிந்­து­வ­ரும் ஐயா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் பங்­கேற்­ற­னர். இவர்­களில் மூவா­யி­ரம் பேர் தமி­ழர்­கள்.

எனி­னும் தேர்வு எழு­திய தமி­ழர்­களில் 5 பேர் மட்­டுமே தேர்ச்சி பெற்­ற­னர். மற்ற அனைவரும் வட­மா­நி­லங்களைச் சேர்ந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!