ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரரான மாதவிடாய் பட்டை தயாரிப்பு நிறுவனம்

ஜெய்ப்­பூர்: ஐபி­எல் கிரிக்­கெட் போட்டி­யில் பங்­கேற்­கும் அணி­களில் ஒன்­றான ராஜஸ்­தான் ராயல்ஸ் அணிக்கு பிர­பல இந்­திய நிறு­வ­ன­மான நைன் விளம்­ப­ர­தா­ரர் ஆகி­யுள்­ளது.

இது மாத­வி­டாய்ப் பட்­டை­களை தயா­ரிக்­கும் பிர­பல நிறு­வ­ன­மா­கும். ராஜஸ்­தான் ராயல்ஸ் அணி­யைச் சேர்ந்த வீரர்­கள் இந்­நி­று­வ­னத்­தின்­ சின்னம் பதிக்­கப்­பட்ட சீரு­டையை போட்­டி­கள் நடை­பெ­றும்­போது அணிந்­தி­ருப்­பர்.

இதன் மூலம் மாத­வி­டாய் குறித்து சமூ­கத்­தில் விழிப்­பு­ணர்வு ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மாத­விடாய்ப் பட்டை தயா­ரிக்­கும் நிறு­வ­னம் ஒன்று கிரிக்­கெட் அணிக்கு விளம்­ப­ர­தா­ரர் ஆகி­யி­ருப்­பது இதுவே முதன் முறை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மாத­வி­டாய் குறித்த விழிப்­பு­ணர்வு உல­கெங்­கி­லும் மேலும் அதி­க­ரிக்க வேண்­டும் என ராஜஸ்­தான் ராயல்ஸ் அணி­யின் தலை­மைச் செயல் அதி­கா­ரி­யான ஜேக் லஷ் தெரி­வித்­துள்­ளார்.

“இந்­தியா உட்­பட பல நாடு­களில் மாத­வி­டாய் குறித்த விழிப்­பு­ணர்வு குறை­வா­கவே உள்­ளது. ஆண்­கள் மட்­டு­மல்ல பெண்­க­ளுக்­கும் போதிய விழிப்­பு­ணர்வு இல்லை,” என்று ஜேக் லஷ் மேலும் கூறி­யுள்­ளார்.

தெற்­கா­சி­யா­வில் மாத­வி­டாய் என்­பது வெட்­கக்­கே­டா­னது, அசௌ­க­ரி­ய­மா­னது என்ற கருத்து வய­துக்கு வந்த பெண்­க­ளி­டம் அதி­கம் உள்­ளது.

இந்­தி­யா­வில் மாத­வி­டாய் பரு­வத்தை எட்­டி­யுள்ள சுமார் 350 மில்­லி­யன் பெண்­களில் சுமார் 8 மில்­லி­யன் பேர் மட்­டுமே மாத­வி­டாய் பட்­டை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கச் சொல்­கிறது நைன் நிறு­வ­னம். பல பெண்­கள் மாத­வி­டாய் நாட்­களில் சுகா­தா­ர­மற்ற முறை­யில் செயல்­படு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள நைன் நிறு­வ­னம், கிரிக்­கெட் அணிக்கு விளம்­ப­ர­தா­ர­ராவதன் மூலம் மாத­வி­டாய் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த முடி­யும் என நம்­பு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!