சீனாவுக்கு தடை: இந்தியாவுக்கு சாதகம்

சீனாவுக்கு தடை: இந்தியாவுக்கு சாதகம்

1 mins read
21f94bdf-eebc-4cbd-8796-3f681a0d9a0e
படம்: ராய்ட்டர்ஸ் -

சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா அடுத்தடுத்து தடை விதித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில ஜவுளிகளுக்கு அமெரிக்காவும் தடை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கை இந்தியாவுக்குச் சாதகமாக அமையும் என தர நிர்ணய நிறுவனமான 'இக்ரா' தெரிவித்துள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக, மனிதாபிமானமற்ற முறையில் மக்கள் உடல் உழைப்பில் ஈடுபடுத்தப் படுவதால் அப்பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப் படும் சில தயாரிப்புகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள் ளது.

இதற்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு சாதகமாகி உள்ளது.