இந்தியாவில் ‘ஹெர்டு இம்யூனிட்டி’ உருவாகிறதா?

கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அசுர வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு அடுத்த படியாக 5 மில்லியன் கிருமித்தொற்று எண்ணிக்கையைக் கடந்துள்ள ஒரே நாடாக அது உள்ளது.

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் தவித்து வந்த நிலையில், தற்போது அங்கு ஊரடங்கு தளார்த்தப்பட்டுள்ளது. ஆனால், தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் எண்ணிக்கையாக உள்ளது. ஆனாலும் அங்கு கிருமித்தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 78 விழுக்காட்டுக்கு மேல் இருப்பதும், கொவிட்-19ஆல் உயிரிழப்போர் விகிதம் 1.64 விழுக்காடாக இருப்பதும் ஆறுதல்.

கொவிட்-19க்கான தடுப்பு மருந்தும் இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில், ‘ஹெர்டு இம்யூனிட்டி’ எனப்படும் குழு நோயெதிர்ப்புதான் இந்தியாவுக்கான வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்தக் கேள்விக்கு இவ்வளவு சீக்கிரத்தில் பதில் காண இயலாது என்றாலும், கிருமித்தொற்று அதிகம் காணப்படும் சில பகுதிகளில் அத்தகைய நோயெதிர்ப்புத் தன்மை ஏற்கெனவே உருவெடுத்து வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இந்தியாவில் இத்தகைய குழு நோயெதிர்ப்பு தன்மை உருவெடுப்பதற்கான சாத்தியம் மிகச் சிறிதே என்கின்றனர் சிலர்.

கிருமித்தொற்று கண்டவர்களுடன் வசிக்கும் குழுக்களிடையே தடுப்பு மருந்து மூலமோ அல்லது இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி மூலமோ கிருமிப் பரவல் நிகழ்வதை ‘ஹெர்டு இம்யூனிட்டி’ தடுக்கும்.

அதிகாரிகள் குறிப்பிடும் எண்ணிக்கையைவிட கூடுதலானோருக்கு இந்தியவில் கிருமித்தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதிக மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் 55 முதல் 60 விழுக்காட்டினருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதும் பரவல் கட்டுக்குள் வந்தது. அங்கு புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்ததாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

குழு நோயெதிர்ப்புத் தன்மை உருவாக்கத்தைொரு வாய்ப்பாக இந்தியா இப்போது கருதாவிட்டாலும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய முதியவர்கள், வேறு நோய்ப் பிரச்சினை உடையவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, தனிச் சுகாதாரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கபப்டுகிறது.

இனிவரும் காலங்களில் ‘ஹெர்டு இம்யூனிட்டி’ ஏற்பட வாய்ப்பிருந்தாலும் தற்போது அது உருவாகியிருப்பதாகக் கூற முடியாது என இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் தலைவ ர்டாக்டர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!