வேளாண் சட்டங்கள்: மோடி அரசுக்கு மற்றொரு சோதனை

2 mins read
aed3eba4-e3ef-4939-9fa3-ba42c635cd5f
இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே வேளாண் மசோதாக்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. படம்: இந்திய ஊடகம் -

அகாலி தள அமைச்சர் பதவி விலகினார்; போராட்டம் தீவிரமடையும் என கடும் எச்சரிக்கை

இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு இருக்­கும் புதிய வேளாண் மசோ­தாக்­கள் பிர­த­மர் மோடி­யின் அர­சாங்­கத்­திற்கு மேலும் ஒரு கடு­மை­யான சோத­னை­யாக அமை­யும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

எதிர்க்­கட்­சி­கள் மட்­டு­மின்றி பாஜக கூட்­டணி கட்­சி­களும் அந்த மசோ­தாவை எதிர்க்­கத் தொடங்கி இருக்­கின்­றன. மூன்று வேளாண் மசோ­தாக்­க­ளுக்­கும் எதிர்ப்பு தெரி­வித்து மத்­திய அமைச்­சர் ஒரு­வர் பதவி வில­கி­விட்­டார்.

வரும் நாட்­களில் விவ­சா­யி­கள் பெரும் போராட்­டத்­தைத் தொடங்கு­வார்­கள் என்று தெரிகிறது.

பாஜ­க­வுக்கு மிக­வும் அணுக்­க­மாக இருந்து வந்­துள்ள சிரோ­மணி அகா­லி­த­ளம் கட்­சி­யைச் சேர்ந்த உணவு பத­னீட்­டுத் துறை அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கோர் பாதல் மசோ­தா­விற்கு எதிர்ப்பு தெரி­வித்து மத்­திய அமைச்­ச­ர­வை­யில் இருந்து வில­கி­விட்­டார்.

விவ­சா­யி­கள் விளை­பொ­ருள் வாணி­பம் மற்­றும் வர்த்­த­கம் (வளர்ச்சி மற்­றும் வசதி) மசோதா, விவ­சா­யி­கள் (அதி­கா­ரம் வழங்­கு­தல் மற்­றும் பாது­காப்பு) விலை உத்­த­ர­வாத மற்­றும் வேளாண் சேவை­கள் மசோதா 2020 ஆகிய இரண்டு மசோ­தாக்­கள் மக்­க­ள­வை­யில் நிறை­வேற்­றப்­பட்­டன.

ஏற்­கெ­னவே அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் (திருத்­தம்) மசோ­தா­வை­யும் நிறை­வேற்­றி­யது. இந்த மசோ­தாக்­கள் முத­லா­ளி­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்­கின்­றன என்­றும் விவ­சா­யி­களை அடி­மைப்­ப­டுத்­தி­வி­டும் என்­றும் எதிர்த்­த­ரப்­பி­னர் ஆர்ப்­பாட்­டம் நடத்­து­கி­றார்­கள்.

விளை­பொ­ருட்­களை நேர­டி­யாக விற்­பனை செய்ய வகை­செய்­யும் இந்த மசோ­தாக்­கள், பெரும் பெரும் முத­லா­ளி­கள் கொழிப்­ப­தற்கு வழி­வகுத்­து­வி­டும் என்­றும் அவர்­க­ளி­டம் விவ­சா­யி­கள் நிலத்தை இழந்து நிற்­கக்­கூ­டிய ஆபத்­துள்­ள­தா­க­வும் எதிர்த்­த­ரப்­பி­னர் கூறு­கி­றார்­கள்.

இந்த நிலை­யில், வேளாண் மசோ­தாக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ரயில் மறி­யல் போராட்­டம் நடத்த பஞ்­சாப் மாநி­லத்­தைச் சேர்ந்த விவ­சாய சங்­கம் முடிவு செய்­துள்­ளது.

இந்த மசோ­தாக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து ஹரி­யானா, தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த விவ­சா­யி­களும் போராட்­டம் நடத்தி வரு­கிறார்­கள். ஏற்­கெனவே பல்­வேறு விவ­சாய அமைப்­பு­கள் முழு அடைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளன.

இத­னி­டையே, வேளாண் மசோதா விவ­கா­ரத்­தில் விவ­சா­யி­களைத் தவ­றாக வழி­ந­டத்த முயற்சி நடப்­ப­தாக தெரி­வித்­துள்ள பிர­த­மர் மோடி, புதிய மசோ­தாக்­களை வர­வேற்­றுள்­ளார்.

கொவிட்-19, சீனா­வு­டன் எல்லை பிரச்­சினை, வர­லாறு காணாத பொரு­ளி­யல் இறக்­கம், மாபெ­ரும் வேலை­யில்லாத் திண்­டாட்­டம் போன்ற கடு­மை­யான சவால்­களை எதிர்­நோக்கி வரும் மத்­திய அர­சுக்கு இந்த வேளாண் மசோ­தாக்கள் மற்­றொரு சோத­னை­யாக இருக்­கும் என்று நம்பப்படு­கிறது.