கூகல் புதிய நெறிமுறைகள் வெளியீடு: பேடிஎம் செயலி நீக்கம்

கூகல் புதிய நெறிமுறைகள் வெளியீடு: பேடிஎம் செயலி நீக்கம்

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வில் மின்­னி­லக்­கப் பரி­வர்த்­தனை துறை­யில் முன்­னணி நிறு­வ­ன­மாக செயல்­பட்டு வரும் பேடி­எம் (Paytm) செயலி கூகல் பிளேஸ்­டோ­ரில் (PlayStore) இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளது. இணைய விளை­யாட்­டு­க­ளி­லும், இணை­யம் வழி­யி­லான சூதாட்­டங்­க­ளி­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் பங்­கு­பெற பேடி­எம் ஊக்­க­மூட்டி­ய­தாக கூகல் குற்­றம்­சாட்­டி­உள்­ளது.

இந்­தி­யா­வில் சூதாட்­டத்­திற்கு எதி­ரான தனது புதிய நெறி­மு­றை­களை கூகல் இந்­தியா நேற்று வெளி­யிட்­டது.

எனி­னும், பேடி­எம் மணி, பேடிஎம் ஃபார் பிசி­னஸ், பேடி­எம் இன்­சைடர் உள்­ளிட்ட பேடி­எம் நிறு­வ­னத்­தின் இதர செய­லி­கள் பிளேஸ்­டோ­ரில் தொடர்ந்து இருக்­கின்­றன.

பேடிஎம் செயலி ஆப்பிள் நிறுவனச் செயலித் தொகுப்பில் இன்னமும் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்