பாதுகாப்பு: நான்கு நாட்டு பேச்சில் இந்தியா மும்முரமாக ஆயத்தம்

புது­டெல்லி: அமெ­ரிக்கா, இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பான் ஆகிய நான்கு நாடு­களும் அடுத்த மாதம் பாது­காப்பு கலந்­து­ரை­யா­டல் கூட்டத்தை எங்கு, எந்த தேதி­யில் நடத்­த­லாம் என்­பது பற்றி பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன.

அந்த நான்கு நாடு­க­ளின் கூட்­டத்­திற்­குப் பிறகு இந்­தி­யா­வுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யில் இரு­த­ரப்பு கூட்­டம் நடக்­கும் என்­றும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இந்த இரண்டு கூட்­டங்­க­ளை­யும் புது­டெல்­லி­யி­லேயே அடுத்த மாத பிற்­ப­கு­தி­யில் நடத்­த­லாம் என்று ஜப்­பான் விருப்­பம் தெரி­வித்து இருக்­கிறது.

‘குவாட்’ எனப்­படும் இந்த நான்கு நாட்டு பாது­காப்பு கலந்­துரை­யா­டல், ராணுவத் தள­வாட வசதிகளைப் பகிர்ந்­து­கொள்­ளும் ஜன­நா­யக நாடு­க­ளுக்கு இடை­யில் சாதா­ரண நிலை­யில் இடம்­பெ­றும் ஓர் ஏற்­பா­டா­கும்.

இந்த நாடு­கள் பயிற்­சி­க­ளின் மூல­மா­க­வும் தக­வல்­க­ளைப் பகிர்ந்து­கொள்­வ­தன் மூல­மா­க­வும் சேர்ந்து ஒன்­றை­யொன்று சார்ந்து செயல்­படு­கின்­றன.

இந்­திய பசி­பிக் கடற்­ப­குதி வழி­களைச் செயற்­கை­யான தடை­கள், கட்­டுப்­பா­டு­கள் எது­வு­மின்றி சுதந்­தி­ர­மாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்று இந்த நாடு­கள் கடப்­பாடு கொண்­டி­ருக்­கின்­றன.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ, இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ் ஜெய்­சங்­கர், ஜப்­பா­னிய அமைச்­சர் டோஷி­முட்சு மோட்­டேகி, ஆஸ்­தி­ரே­லிய வெளி­யு­றவு அமைச்­சர் மாரிஸ் பெய்னி ஆகி­யோர் கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொள்­வார்­கள் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜப்­பா­னிய பிர­த­மர் மாற்­றம் இடம்­பெற்­ற­தன் கார­ண­மாக இந்தக் கூட்­டம் நடக்­கும் தேதி­யும் இட­மும் மாற்­ற­ம­டைந்­துள்­ளன.

புது­டெல்­லி­யில் இந்­திய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங்­கும் அமெ­ரிக்கத் தற்­காப்பு அமைச்­சர் மார்க் எப்­ச­ரும் சந்­தித்துப் பேச திட்­ட­மிடப்­பட்டு உள்­ளது.

இந்த நான்கு நாட்டு தற்­காப்பு ஏற்­பாடு குறிப்­பாக எந்­த­வொரு நாட்­டை­யும் குறி­வைத்து இடம்­பெ­ற­வில்லை என்றா­லும் சீனா­வின் நில­வ­ரங்­க­ளை­யும் இந்­தி­யப் பசி­பிக் பெருங்­க­டல் மற்­றும் இந்­தி­யப் பெருங்­க­டல் பகு­தி­யின் பாது­காப்­பில் சீனா­வின் தாக்­கத்­தை­யும் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­கத் தெரி­கிறது.

இந்­தி­யா­வும் ஜப்­பா­னும் அமைச்­சர் நிலை­யி­லும் இந்­தி­யா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் வெளி­யு­றவுச் செய லாளர்கள் நிலை­யி­லும் இரு­த­ரப்பு பேச்சு நடத்­த­வும் திட்­டம் உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!