தினகரன் திடீர் டெல்லி பயணம்: புது கூட்டணி அமைய வாய்ப்பு

புது­டெல்லி: அம­முக பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன் நேற்று காலை திடீ­ரென டெல்­லிக்கு மேற்­கொண்ட பய­ணம் தமி­ழக அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அவர் மூன்று தினங்­கள் டெல்­லி­யில் தங்­கி­யி­ருப்­பார் என்­றும் சில முக்­கிய அர­சி­யல் சந்­திப்­பு­களை நிகழ்த்­து­வார் என்­றும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

நேற்று காலை சுமார் 9.30 மணி­ய­ள­வில் தனி விமா­னம் மூலம் டெல்­லிக்­குச் சென்­றார் தின­க­ரன். முன்­ன­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­திக்­க­வில்லை.

டெல்­லி­யில் அவர் காங்­கி­ரஸ் மூத்த தலை­வ­ரும் வழக்­க­றி­ஞ­ரு­மான அபி­ஷேக் மனு சிங்­வியை சந்­திப்­பார் என்று தெரி­கிறது. உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்ள தின­க­ர­னு­டன் தொடர்­பு­டைய வழக்­கு­களில் அபி­ஷேக் சிங்வி முன்­னி­லை­யாகி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் அவ்­வ­ழக்­கு­கள் தொடர்­பாக விவா­திக்­க­வும் சசி­க­லாவை முன்­கூட்­டியே விடு­தலை செய்­வது தொடர்­பாக ஆலோ­சிக்­க­வும் அபி­ஷேக் மனு சிங்­வியை தின­க­ரன் முத­லில் சந்­தித்­துப் பேச உள்­ளார் என அம­முக வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இதை­ய­டுத்து அவர் பாஜக தலை­வர்­கள் சில­ரைச் சந்­திப்­பார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

தமி­ழ­கத்­தில் அம­மு­கவை வலுப்­ப­டுத்­து­வ­து­டன் அதி­மு­க­வை­யும் தனது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வதே டிடிவி தின­க­ர­னு­டைய திட்­டம் என்­றும் மத்­தி­யில் ஆட்­சி­யில் இருப்­ப­வர்­க­ளைப் பகைத்­துக்கொண்­டால் இது சாத்­தி­ய­மா­காது என்­பதை அவர் உணர்ந்­தி­ருப்­ப­தா­க­வும் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

பாஜக மூத்த தலை­வர் ஒரு­வர் கடந்த இரண்­டாண்­டு­க­ளாக தின­க­ரனை வெளிப்­ப­டை­யாக ஆத­ரித்து வரு­கி­றார். எனவே அவர் மூல­மாக தின­க­ரன் பாஜக மேலி­டத் தலை­வர்­களை நெருங்­கி­யுள்­ள­தா­கத் தெரி­கிறது. இந்த டெல்லி பய­ணத்­தின் மூலம் பாஜ­க­வு­டன் தின­க­ரன் தரப்பு நெருக்­க­ம­டைய வாய்ப்­புள்­ள­தா­க­வும் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது அதி­முக கூட்­ட­ணி­யில் பாஜக போட்­டி­யிட ஐந்து தொகு­தி­கள் மட்­டுமே ஒதுக்­கப்­பட்­டன. மேலும் பாஜக வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக அதி­முக தலைமை பிரச்­சா­ர­மும் மேற்­கொள்­ள­வில்லை.

தேசிய ஜன­நா­ய­கக் கூட்­டணி என்ற பெய­ரை­யும் கூட அதி­முக தவிர்த்­தது. எனவே அதி­மு­கவை உத­றி­விட்டு எதிர்­வ­ரும் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் அம­மு­க­வு­டன் பாஜக கூட்­டணி அமைக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் ஓர் ஆரூ­டம் அர­சி­யல் களத்­தில் நில­வு­கிறது.

சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகும் பட்சத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் வேகம் பெறும் என்று தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!