போர்க்கப்பலில் முதன் முறையாக, பெண் அதிகாரிகள்

போர்க்கப்பலில் முதன் முறையாக, பெண் அதிகாரிகள்

1 mins read
3c0c4dfc-f1f7-40a9-b796-7d4d69bf0813
-

இந்தியக் கடற்படையில் முதன்முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் போர்க்கப்பல்களில் பணிக்கு அமர்த்தப்படுவர். இதுவரையில் இந்தியாவின் வரலாற்றில் பெண் அதிகாரிகள் கடற்படையில் சேவையாற்றி உள்ளபோதும் எவரும் இதுவரை போர்க்கப்பல் பயணங்களுக்கு அனுப்பப்படவில்லை.

பெண்களுக்குரிய வசதிகள் போர்க்கப்பல்களில் போதிய அளவில் இல்லை என்பதே இதுவரை அவர்கள் சேர்க்கப்படாததற்குக் காரணமாக கூறப்படுகிறது.

'சப் லெப்டினன்ட்' குமுதினி தியாகி, 'சப் லெப்டினன்ட்' ரித்தி சிங் என்ற அந்த இரண்டு பெண் அதிகாரிகளும் பல்வேறு அதிநவீன உணர்கருவிகளை இயக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களுக்கு எந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவ்விரு பெண் அதிகாரிகளும் தெரிவித்தனர்.