லடாக் எல்லையில் மேலும் 3 மலை உச்சிகள் இந்திய ராணுவத்தின் வசம்

ஸ்ரீந­கர்: லடாக் எல்­லை­யில் மேலும் மூன்று மலை உச்­சி­க­ளை­யும் சில முக­டு­க­ளை­யும் இந்­திய ராணு­வம் தனது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­துள்­ளது.

இத­னால் சீன ராணு­வம் அதிர்ச்சி அடைந்­தி­ருப்­ப­தாக இந்­திய ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

எல்­லை­யில் நில­வும் பதற்­றத்தை தவிர்க்க இரு நாடு­களும் தொடர் பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­டுள்­ளன.

எனி­னும் எல்­லை­யில் குவிக்­கப்­பட்ட படை­களை திரும்­பப் பெறு­வ­தில் சீனா சுணக்­கம் காட்டி வரு­கிறது. இத­னால் இந்­தி­யா­வும் அதே நிலைப்­பாட்டை கடை­ப்பி­டிக்­கிறது. இந்­திய வீரர்­கள் எல்­லை­யில் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதே­ச­ம­யம், லடாக்­கில் உள்ள பல்­வேறு முக்­கிய மலை முக­டு­களை இந்­திய வீரர்­கள் கைப்­பற்றி உள்­ள­னர். இத­னால் சீன ராணு­வத்­தின் ஒவ்­வோர் அசை­வை­யும் இந்­தி­யா­வால் கவ­னிக்க முடி­யும். இந்­நி­லை­யில், சீன ராணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டில் இருந்து வந்த மஹர், குருங், மொக்­பாரி ஆகிய மூன்று புதிய மலை உச்­சி­க­ளை­யும் இந்­திய ராணு­வம் கடந்த வாரம் கைப்­பற்­றி­ய­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் எல்­லை­யில் ரஃபேல் போர் விமா­னங்­கள் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளன. அண்­மை­யில்­தான் இந்த விமா­னங்­கள் இந்­திய விமா­னப்­ப­டை­யில் அதி­கா­ர­பூர்­வ­மாக இணைக்­கப்­பட்­டன.

லடாக் எல்­லை­யில் நில­வும் பிரச்சி­னையை திசை திருப்­பு­வ­தற்­காக தென் சீனக் கடல் பகு­தி­யில் சீன ராணு­வம் படை­களைக் குவித்து வரு­வ­தாக மற்­றொரு தக­வல் தெரி­விக்­கிறது. சீனா­வின் இந்த நட­வ­டிக்கை கார­ண­மாக அதன் மீது உலக நாடு­கள் அதிருப்தி அடைந்துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!