தீவிரவாதிகள் வீட்டில் ரகசிய பாதாள அறை கண்டுபிடிப்பு

பத்து மணி நேரம் நீடித்த விசாரணை; பல தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக தகவல்

புது­டெல்லி: தேசிய புல­னாய்வு முக­மை­யால் (படம்) கைது செய்­யப்­பட்ட அல்­கய்டா தீவி­ர­வா­தி­க­ளி­டம் அதி­கா­ரி­கள் ஞாயிற்­றுக்­கி­ழமை தீவிர விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

சுமார் பத்து மணி நேரம் இந்த விசா­ரணை நீடித்­தது என்­றும் பல்­வேறு முக்­கிய தக­வல்­கள் கிடைத்­த­தா­க­வும் ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

மேற்­கு­வங்க மாநி­லம் முர்­ஷி­தா­பாத்­தில் உள்ள தேசிய புல­னாய்வு முக­மை­யின் அலு­வ­ல­கத்­தில் வைத்து தீவி­ர­வா­தி­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. கைதான ஆறு பேரும் டெல்­லிக்கு அழைத்­துச் செல்­லப்­பட இருப்­ப­தாக புல­னாய்வு முகமை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இதற்­கி­டையே கேர­ளா­வி­லும் மூன்று தீவி­ர­வா­தி­கள் பிடி­பட்­டுள்­ள­னர்.

கைதா­ன­வர்­களில் ஒரு­வ­ரான அபு சுபி­யன் முல்லா என்­ப­வ­ரது வீட்­டில் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­ய­போது அங்கு பாதாள அறை இருப்­பது தெரி­ய­வந்­தது. அந்த அறை­யில் பல டன் அளவு வெடி­பொ­ருட்­க­ளை­யும் ஆயு­தங்­க­ளை­யும் பதுக்கி வைக்க முடி­யும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து முர்­ஷி­தா­பாத் பகுதி போலி­சா­ரும் விசா­ர­ணையை தீவி­ரப்­ப­டுத்தி உள்­ள­னர்.

முர்­ஷி­தா­பாத்­தின் டோம்­கால் பகு­தி­யைச் சேர்ந்த மற்­றொரு பயங்­க­ர­வா­தி­யான நஜ்­மஸ் சாகிப், இரண்­டாம் ஆண்டு கல்­லூரி மாண­வர். அவ­ருக்­கும் காஷ்­மீ­ரில் உள்ள சமூக விரோ­தி­க­ளுக்­கும் இடையே தொடர்பு இருப்­பது விசா­ர­ணை­யில் அம்­ப­ல­மா­னது.

அல் அல் மாமுன் கமால் மதப்­பள்ளி நடத்தி வரு­வ­து­டன், அங்கு பயி­லும் மாண­வர்­கள் மன­தில் தீவி­ர­வாத சிந்­த­னையை பதிய வைத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பிடி­பட்ட நான்கு பேரின் வங்­கிக் கணக்­கு­களை ஆராய்ந்­த­போது வரு­மா­னத்­துக்கு மீறி பெரிய தொகை­க­ளைக் கொண்டு பணப்­ப­ரி­மாற்­றம் நடந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இதற்­கி­டையே கேர­ளா­வில் பிடி­பட்ட மூன்று பயங்­க­ர­வா­தி­கள் நேற்று முன்­தி­னம் கொச்சி நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்படுத்­தப்­பட்­ட­னர்.

பின்­னர் மூவ­ரை­யும் தேசிய புல­னாய்வு முக­மை­யின் காவ­லில் வைத்து மூன்று நாட்­கள் விசா­ரிக்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

இதற்­கி­டையே, நாடு முழு­வ­தும் அடை­யா­ளம் காணப்­ப­டாத மேலும் பல தீவி­ர­வா­தி­கள் ஒளிந்­தி­ருப்­ப­தாக புல­னாய்வு முகமை தெரி­வித்­துள்­ளது. அவர்களைக் குறிவைத்து தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!