தொற்றுக்கு மத்தியில் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

கொரோனா கிருமித்­தொற்று பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­யாக மூடப்­பட்­டி­ருந்த பள்­ளிகளைகத் திறக்க ஏழு மாநில அர­சு­கள் உத்­த­ர­விட்­டுள்ளன. அம்மா­நி­லங்­களில் நேற்று பள்ளி­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டன.

மத்­திய அரசு தொடர்ந்து ஊரடங்குத் தளர்­வு­களை அறி­வித்து வரு­கிறது. அந்த வகை­யில், செப்­டம்­பர் 21 முதல் ஒன்­ப­தாம் வகுப்பு முதல் பன்­னி­ரண்­டாம் வகுப்பு வரை மாண­வர்­கள் தங்­கள் விருப்­பத்­தின் பேரில் பள்­ளிக்குச் செல்­ல­லாம் என்­றும், ஆசி­ரி­யர்­க­ளி­டம் தேவை­யான ஆலோ­ச­னை­களைப் பெற­லாம் என்­றும் மத்­திய அரசு முன்பே அறி­வித்­தி­ருந்­தது.

அதன்­படி ஆந்­திரா, அசாம், ஹரி­யானா, ஜம்மு காஷ்­மீர், நாகலாந்து மற்­றும் மத்­தி­யப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­களில் நேற்று பள்­ளி­கள் திறக்­கப்­பட்­டன.

முதற்­கட்­ட­மாக 15 நாட்­க­ளுக்கு வகுப்­பு­களை நடத்த பள்ளி நிர்­வா­கங்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

கிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் இருக்­கும் பட்­சத்­தில் சூழ்­நி­லைக்கு ஏற்ப முடி­வெ­டுக்க பள்ளி நிர்வா கங்­கள் முடிவு செய்­துள்­ளன.

பள்­ளி­கள் திறக்­கப்­பட்ட போதி­லும், மாண­வர்­கள் கட்­டா­யம் வகுப்­பு­களில் பங்­கேற்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­றும் பெற்­றோர் விரும்­பி­னால் மட்­டுமே வகுப்­பு­க­ளுக்கு வர­லாம் என்­றும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

வகுப்­புக்கு வரும் ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் உடல் வெப்­ப­நிலை பரி­சோ­தனை செய்­யப்­பட வேண்­டும். கட்­டா­யம் முகக்­க­வ­சம் கண்­டிப்­பாக அணிய வேண்­டும், தனி­ ம­னித இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­ப­து­டன், கிரு­மி­நா­சினி­யை­யும் உரிய நேரத்­தில் பயன்­படுத்த வேண்­டும் என அர­சுத்­தரப்­பில் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கிரு­மித்­தொற்று குறித்த அச்சம் இருந்­தா­லும், நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு பள்­ளி­கள் திறக்­கப்­பட்­ட­தால் மாண­வர்­கள் உற்­சா­க­ம­டைந்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!