‘கொவிட்-19’: 4.4 மில்லியன் நோயாளிகள் குணமடைந்தனர்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 5.5 மில்­லி­யனை நெருங்­கி­யுள்­ளது.

எனி­னும் கொவிட்-19 நோயி­லி­ருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 4.4 மில்­லி­ய­னாக உயர்ந்­துள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது உல­க­ள­வி­லான மொத்த பாதிப்­பில் 19 விழுக்­காடு ஆகும். இதன் மூலம் உல­க­ள­வில் கொரோனா கிரு­மிப்­பி­டி­யில் இருந்து விடு­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­முள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இந்­தியா முத­லி­டம் பிடித்­துள்­ளது.

சுமார் ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரும் நிலை­யில், இது­வரை சுமார் 88 ஆயி­ரம் பேர் பலி­யா­கி­யுள்­ள­னர்.

இந்­தி­யா­வில் கொவிட்-19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்­த­வர்­க­ளுக்கு மீண்­டும் கிரு­மி ­தொற்­றி­ய­தாக சில தக­வல்­கள் வெளி­வந்­துள்­ளன. இது­தொ­டர்­பாக மத்­திய அரசு ஆய்வு மேற்­கொண்­டுள்­ளது.

எனி­னும் தமி­ழ­கம், தெலுங்­கானா, கர்­நா­டகா, குஜ­ராத், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநி­லங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் இரண்­டா­வது முறை­யாக பாதிப்பு ஏற்­பட்­டதா என்­பதை இம்­மா­நி­லங்­கள் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை.

இத­ன­டிப்­ப­டை­யில் இந்­தி­யா­வில் அக்­டோ­பர் மாதம் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 7 மில்­லி­ய­னைக் கடந்து­வி­டும் என அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ள­தாக இந்­திய ஊட­கத்­த­க­வல் தெரி­விக்­கிறது.

மேலும் அக்­டோ­பர் தொடங்கி அடுத்­தாண்டு பிப்­ர­வரி வரை­யில் நோய்த்­தொற்­றுப் பர­வல் வேக­மாக இருக்­கும் என்­றும் அச்­செய்தி தெரி­விக்­கிறது.

இந்­தி­யா­வில் முப்­பது வெவ்­வேறு தடுப்­பூ­சி­கள் பரி­சோ­திக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவற்­றுள் மூன்று தடுப்­பூ­சி­கள் வெவ்­வேறு நிலை­களில் பரி­சோ­திக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் மத்திய சுகா­தார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!