வரலாற்றில் முதன்முறையாக இந்திய போர் விமானங்களை இயக்கும் பெண்கள்

இந்­திய கடற்­ப­டை­யைச் சேர்ந்த ரிதி சிங், குமு­தினி தியாகி ஆகிய இரண்டு பெண் அதி­கா­ரி­கள் போர் ஹெலி­காப்­டரை இயக்­கத் தேர்­வாகி உள்­ள­னர்.

இந்­தி­யக் கடற்­படை வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக போர் ஹெலி­காப்­டர்­களை இயக்­கும் பொறுப்பு பெண் அதி­கா­ரி­கள் வசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இரு பெண் அதி­கா­ரி­களும் கடற்­ப­டை­யில் துணை லெப்­டி­னென்­டாக பணி­யாற்றி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் ஐஎன்­எஸ் கருடா போர்த்­த­ள­வா­டத்­தின் ஓர் அங்­க­மான ஹெலி­காப்­டர்­களை இயக்­கும் பணி­யில் இவர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட உள்­ள­னர்.

எதி­ரி­யின் தூர இலக்­கைக் கண்­ட­றி­வது, அச்­சு­றுத்­தல்­களை மதிப்­பீடு செய்­வது ஆகிய பணி­களை இரு­வ­ரும் மேற்­கொள்­வார்­கள் என்­றும் அதற்­கான பயிற்சி அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்­றும் இந்­திய கடற்­படை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே இந்­திய விமா­னப் படை­யில் அண்­மை­யில் இணைக்­கப்­பட்ட ரஃபேல் போர் விமா­னங்­களை பெண் அதி­காரி ஒரு­வர் இயக்கி உள்­ளார்.

கடந்த இரு தினங்­க­ளாக லடாக் எல்­லைப் பகு­தி­யில் இரண்டு ரஃபேல் போர் விமா­னங்­கள் கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுத்­தப்­பட்­டன.

அவற்­றுள் ஒரு விமா­னத்தை இயக்­கி­யது பெண் விமானி என்று தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்­காக அந்­தப் பெண் விமானி குறித்த எந்­த­வி­த­மான தக­வல்­க­ளை­யும் தற்­காப்பு அமைச்சு வெளி­யி­ட­வில்லை.

இந்­திய விமா­னப் படை­யின் போர் விமா­னங்­களை இயக்க இது­வரை பத்து பெண் விமா­னி­கள் பயிற்சி பெற்­றுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!