ஆசியாவின் உயரமான பெண் யானை மறைவு

கோவை: ஆசி­யா­வின் உய­ர­மான பெண் யானை­யா­கக் கரு­தப்­படும் கல்­பனா உடல்­ந­லக் குறைவு கார­ண­மாக கோவை­யில் நேற்று முன்­தி­னம் உயி­ரி­ழந்­தது.

அதற்கு இறுதி அஞ்­சலி செலுத்­தும் நிகழ்­வில் ஏரா­ள­மான யானைப் பாகன்­களும் வனத்­து­றை­யி­ன­ரும் பங்­கேற்­ற­னர்.

விண்­வெளி வீராங்­கனை கல்­பனா சாவ்­லா­வின் நினை­வாக இந்த யானைக்­குப் பெயர் சூட்­டப்­பட்­ட­தாக பாகன் பழ­னிச்­சாமி தெரி­வித்­துள்­ளார். கோவை­யில் அமைந்­துள்ள கும்கி யானை­கள் பயிற்சி மையத்­தில் வளர்க்­கப்­பட்ட யானை­களில் கல்­ப­னா­வும் ஒன்று.

41 வய­தான கல்­ப­னாவை பாகன் பழ­னிச்­சா­மி­தான் பல ஆண்­டு­க­ளா­கப் பரா­ம­ரித்து வரு­கி­றார். யானை­யின் பெயரை அவர் தன் கையில் பச்சை குத்தி உள்­ளார்.

கல்­ப­னா­வை­ தமது குடும்­ப உறுப்­பி­ன­ரா­கக் கருதி வந்­த­தா­க­வும் அதுதான் ஆசி­யா­வி­லேயே மிக உய­ர­மான பெண் யானை என்­றும் பழனிச்சாமி தெரி­வித்­துள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!