சுடச் சுடச் செய்திகள்

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிய மனைவியின் வயிற்றை அரிவாளால் கிழித்த ஆடவர்; மனைவி கவலைக்கிடம்

உத்தரப் பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அரிவாள் கொண்டு கிழித்த ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மனைவியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், கருப்பையில் இருந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அந்தக் குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறப்பட்டது.

ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளைக் கொண்டுள்ள தம்பதிக்கு இது ஆறாவது கர்ப்பம்.

ஆறாவதும் பெண் குழந்தையாகிப் போகுமோ என்ற அச்சத்தில் அந்த ஆடவர், இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமையால், பெண் குழந்தைகளைப் பாரமாக இந்தியர்கள் பலர் கருதுகின்றனர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறுவது சட்ட விரோதம்.

ஆனால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள ஆடவர் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட அந்த ஆடவர் தற்போது போலிஸ் காவலில் இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon