கொரோனா காலத்தில் கொடுமை அதிகரிப்பு

புது­டெல்லி: கொரோனா கிரு­மிப் பர­வல் காலத்­தில் இந்­தி­யா­வில் குடும்ப வன்­முறை, குழந்தை கொடுமை போன்­றவை அதி­க­ரித்­த­தாக நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மார்ச் முதல் செப்­டம்­பர் 18ஆம் தேதி வரை 4,350 குடும்ப வன்­

மு­றைச் சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தாக பெண்­கள், குழந்­தை­கள் மேம்­பாட்டு அமைச்­சர் ஸ்மி­ரிதி இரானி கூறி­னார். இவற்­றில் 1,443 புகார்­கள் அமைச்­சின் வாட்ஸ்­அப் எண் வழி­யாக செய்­யப்­பட்டு உள்­ள­தாக மாநி­லங்­க­ள­வை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

“கொவிட்-19 கார­ண­மாக முடக்­க­ நிலை நடப்பில் இருந்­த­போது குடும்ப வன்­முறை தொடர்­பாக பெண்­கள் தாரா­ள­மாக முன்­வந்து புகார் தெரி­விக்க தேசிய பெண்­கள் ஆணை­யம் ஏற்­பாடு செய்­தது. அதற்­காக சமூக ஊட­கங்­கள் வாயி­லாக பிர­சா­ரம் செய்­யப்­பட்­டது. ஏப்­ரல் 10ஆம் தேதி 7217735372 என்­னும் வாட்ஸ்­அப் எண்ணை ஆணை­யம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. உடனடி யாக உத்­த­ரப் பிர­தே­சத்­தில் இருந்து 190, டெல்­லி­யி­லி­ருந்து 181, மகாராஷ்­ டி­ரா­வில் இருந்து 143 புகார்­கள் வந்­தன.

“மேலும் காலம் கால­மாக வீட்­டுக்­குள் கொடு­மை­களை அனு­

ப­வித்து வரும் பெண்­களும் துணிச்­ச­லாக புகார் செய்ய ஆணை­யம் வசதி ஏற்­ப­டுத்­தித் தந்­தது.

“புகார்­கள் கிடைக்­கப்­பெற்­ற­துமே பாதிக்­கப்­பட்ட பெண்­ணை­யும் அவர் வசிக்­கும் இடத்­துக்­கு­ரிய காவல்­துறை அதி­கா­ரி­க­ளை­யும் அழைத்து பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்பட்­டன. கடந்த ஆறு மாத கால­மாக பெண்­க­ளின் பாது­காப்­புக்கு மத்­திய அர­சாங்­கம் அதிக முக்­கி­யத்­து­வம் கொடுத்து வந்­துள்­ளது,” என்­றார் அமைச்­சர் இரானி.

தொடர்ந்து, நாடு முழு­வ­தும் நடை­பெற்ற குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­கள், பெண்­க­ளுக்­கும் குழந்­தை­க­ளுக்­கும் எதி­ரான கொடு­மை­கள் ஆகி­யன குறித்து மாநில வாரி­யா­க­வும் மாத வாரி­யா­க­வும் அவர் விவ­ரித்­தார். தேசிய இணை­யக் குற்­றப்­பி­ரிவு இணை­யத்­த­ளத்­தில் குழந்­தை­க­ளுக்கு எதி­ராக நடந்த வன்­கொ­டுமை தொடர்­பாக 13,244 புகார்­களும் குழந்­தை­கள் உத­விக்­கான இந்­திய அறக்­கட்­ட­ளை­யில் 3,941 வன்­கொ­டு­மைப் புகார்­களும் பதி­வா­ன­தாக அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!