குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்படுவதை எதிர்த்து போராட்டம்

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத் நக­ரில் 81 ஆண்டு கால­மா­கச் செயல்­பட்டு வந்த தமிழ் பள்­ளிக்­கூ­டத்தை மூட மாவட்­டக் கல்வி நிர்­வா­கம் முடிவு செய்­துள்­ளது. இந்­தத் தமிழ் மேல்­நி­லைப்­பள்­ளி­யில் படித்த ஏரா­ள­மா­னோர் பல்­வேறு அர­சுத் துறை­களில் மேம்­பட்ட பணி­களில் உள்­ள­னர்.

இந்த நிலை­யில் தற்­போது மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து வரு­வ­தா­கக் கூறி பள்­ளியை இழுத்து மூட பள்­ளிக்­கூட நிர்­வா­க­மும் மாவட்­டக் கல்வி நிர்­வா­க­மும் முடி­வெ­டுத்து அறி­விப்பு வெளி­யிட்­டுள்­ளன.

அக­ம­தா­பாத்­தில் வசிக்­கும் தமி­ழர்­கள் மாவட்ட கல்வி அலு­வ­ல­ரைச் சந்­தித்து தமிழ்ப் பள்­ளியை மூட வேண்­டாம் என வேண்­டு­கோள் விடுத்­தும் அந்­தக் கோரிக்­கைக்கு செவி­சாய்க்­கப்­ப­ட­வில்லை. பிர­த­மர் மோடி­யின் தொகு­திக்­குட்­பட்ட மணி­ந­க­ரில் இந்­தப் பள்­ளிக்­கூ­டம் உள்­ளது.

பள்­ளியை மூடி­னால் படிப்பு வீணா­கும் என்று தமிழ் மாண­வர்­களும், மாண­வர்­க­ளின் பெற்­றோர்­களும் கல்வி அமைச்­சரைச் சந்­தித்து கோரிக்கை வைத்­துள்­ள­னர். இருப்பினும் நேற்று வரை அதற்கான பலன் கிட்டவில்லை.

செப்­டம்­பர் 23 (நேற்று) நண்­ப­கல் 12 மணிக்­குள் மாண­வர்­கள் பள்­ளி­யில் மாற்­றுச் சான்­றி­தழை பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றும் தவ­றி­னால் மாவட்ட முதன்­மைக் கல்வி அலு­வ­ல­ரி­டம்­தான் அச்சான்­றி­தழைப் பெற­மு­டி­யும் என்­றும் பள்­ளி­யில் நோட்­டிஸ் ஒட்­டப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் பள்ளி மூடப்­ப­டு­வதை எதிர்த்து மாண­வர்­க­ளின் பெற்­றோர் தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். பள்ளியை மூடும் முடிவுக்கு தமிழ்­நாட்­டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!