6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை

6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை

1 mins read
8af75303-003c-4a8d-84b8-5a99fb810dfa
-

புது­டெல்லி: தங்­கம் விலை நேற்று ஆறு வாரங்­களில் காணப்­ப­டாத சரி­வைச் சந்­தித்­தது.

ஐரோப்­பா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று மித­மிஞ்சி சென்­று­கொண்­டி­ருப்­ப­தும் அமெ­ரிக்க டாலர் வலு­வ­டைந்­தி­ருப்­ப­தும் விலை சரி­வுக்­குச் சொல்­லப்­படும் கார­ணங்­களில் சில.

உல­கச் சந்­தை­யில் தங்­கத்­தின் விலை நேற்று அவுன்­ஸுக்கு $1,873.70 என்று குறைந்­தது.

ஆகஸ்ட் 12ஆம் தேதிக்­குப் பிந்­திய குறை­வான விலை இது. சென்­னை­யில் நேற்று தங்­கம் விலை பவு­னுக்கு ரூ.320 குறைந்­தது. ஒரு கிராம் தங்­கம் ரூ.4,810க்கும் ஒரு சவ­ரன் தங்­கம் ரூ.38,480க்கும் விற்­கப்­பட்­டது.

தொடர்ந்து மூன்று நாட்­களில் சவ­ர­னுக்கு ரூ.992 குறைந்­த­தால் பொன் நகை வாங்­கு­வோர் முகத்­தில் புன்­னகை மலர்ந்­தது.