சுடச் சுடச் செய்திகள்

மகிழ்ச்சிப் பட்டியலில் தமிழ்நாடு இல்லை; மிசோரம் முதலிடம்

இந்­தி­யா­வில் உள்ள மக்­கள் எந்த அள­வுக்கு மகிழ்ச்­சி­யாக உள்­ளார்­கள் என்று ஓர் அறிக்கை தயார் செய்­யப்­பட்டு உள்­ளது.

இந்­தி­யா­வின் முன்­னணி நிர்­வாக உத்தி நிபு­ண­ரான பேரா­சி­ரி­யர் ராஜேஷ் கே பில்­லா­னியா என்­ப­வர் தலைமையில் கடந்த மார்ச் முதல் ஜூலை வரை கொரோனா கிருமிப் பரவிக் கொண்டிருந்த வேளையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ‘இந்­தியா ஹேப்­பி­னஸ்’ என்னும் அறிக்­கை­யாக வெளியிடப்பட்டு உள்ளது.

மிசோ­ரம், பஞ்­சாப், அந்­த­மான் நிகோ­பார் தீவு­கள் ஆகிய மாநி­லங்­களில் உள்ள மக்­களே அதிக மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தாக அறிக்கை குறிப்­பி­டு­கிறது. அதே­நே­ரம் ஒடிசா, சட்டீஸ்­கர், உத்­த­ர­காண்ட் ஆகிய மாநி­லங்­கள், பட்­டி­ய­லின் கடைசி இடங்­களில் உள்­ளன.

முதல் 10 இடங்­களில் குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகியன உள்ள போதிலும் தமிழ்­நாடு இடம்­பெ­ற­வில்லை என்­பது குறிப்­பி­ட­த்தக்கது­.

மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தற்­கும் படிப்பு, வரு­மா­னம், திரு­மண நிலை, வயதுப் பிரிவு போன்­ற­வற்­றுக்­கும் தொடர்பு இருப்­ப­தாக அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

குறிப்­பாக, மண­மா­ன­வர்­களே அதிக மகிழ்ச்­சி­யோடு இருப்­ப­தா­க­வும் அதில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

இந்­தி­யா­வில் மகிழ்ச்­சியை அள­வீ­டா­கக் கொண்­டுத் தயா­ரிக்­கப்­பட்ட முதல் அறிக்கை என்­று இது கருதப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon