திருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்

திருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்

1 mins read
e3ea0fe9-2d34-4061-809b-66c63b27065f
நேற்று மாலை திருமலையில் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி முதல்வர் ஜெகன்மோகன் ஏழுமலையான் கோயிலுக்குள் சென்று காணிக்கைகளை சமர்ப்பித்தார். படம்: இந்திய ஊடகம் -

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட வாகன சேவை நடந்தது.

அதில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பட்டு வஸ்திரங்களைத் தலையில் சுமந்து சென்று சுவாமிக்கு சமர்ப்பித்தார்.

அதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, மிகவும் எளிமையானவர் என்றும் மக்களின் குறை தீர்க்கும் முதல்வர் என்றும் அவர் பிரபலமடைந்து வரும் வேளையில், இந்தப் புகைப்படத்துக்கு சமூக ஊடகவாசிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நேற்று மாலை திருமலையில் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி முதல்வர் ஜெகன்மோகன் ஏழுமலையான் கோயிலுக்குள் சென்று காணிக்கைகளை சமர்ப்பித்தார்.

இதில் திருமதி ரோஜா உட்பட அமைச்சர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்