தென்னிந்தியர்கள் இல்லாத கலாசார ஆய்வுக்குழுவைக் கலைக்க கோரிக்கை

புது­டெல்லி: மத்­திய கலா­சா­ரத்­து­றை­யின் அறி­ஞர்­கள் குழு­வில் தமிழ் மொழி சார்ந்த அறி­ஞர் ஒரு­வர்­கூட இடம்­பெ­றா­மல் போனது கவலை அளிப்­ப­தாக திமுக மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் திருச்சி சிவா அதி­ருப்தி தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக நேற்று முன்­தி­னம் மாநி­லங்­க­ள­வை­யில் பேசிய அவர், சில யோச­னை­களை முன்வைத்­தார்.

இதை­ய­டுத்து அவ­ரது ஆலோ­ச­னையை மத்­திய அரசு பரி­சீ­லித்து ஏற்க வேண்­டும் என மாநி­லங்­க­ள­வைத் தலை­வ­ரும் துணை அதி­ப­ரு­மான வெங்­கையா நாயுடு கூறி­னார்.

மத்­திய அர­சின் அறி­ஞர் குழு­வில் தென்­னக மொழி­கள் எவற்­றுக்­கும் உரிய பிர­தி­நி­தித்­து­வம் தரப்­ப­ட­வில்லை என திருச்சி சிவா சுட்­டிக்­காட்­டி­னார்.

தமிழ் மொழி இந்­தி­யா­வின் மிகத் தொன்­மை­யான மொழி என்­றும் ஏரா­ள­மான வர­லாற்று நிபு­ணர்­கள் தமிழ் மொழி குறித்து ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்ட அவர், தமிழ்­மொழி சார்ந்த அறி­ஞர் ஒரு­வர் கூட மத்­தி­ய­ கு­ழு­வில் இடம்­பெறாமல் போனது கவ­லைக்­கு­ரி­யது என்­றார்.

“இந்­தி­யா­வில் சிறு­பான்­மைப் பிரி­வி­ன­ராக உள்ள, குறிப்­பாக மலை­வாழ் மக்­கள், மக­ளிர், மூன்­றாம் பாலி­னத்­த­வர், வட­கி­ழக்­குப் பிராந்­தி­யப் பகு­தி­களில் வசிப்­போர் மற்­றும் மத­ரீ­தி­யான சிறு­பான்­மை­யி­னர் ஆகி­யோ­ருக்­கான பிர­தி­நி­தித்­து­வம் அறி­ஞர் குழு­வில் வழங்­கப்­ப­ட­வில்லை.

“இந்த இனங்­க­ளை­யும் சேர்த்து ஒருங்­கி­ணைந்த ஆராய்ச்சி செய்­தால் தான் முழு­மை­யான வர­லாற்­றுப் பாரம்­ப­ரி­ய பெரு­மை­யைத் தொகுத்து எழு­த­மு­டி­யும்.

காலனி ஆதிக்­கக் காலத்­திற்கு முந்­தைய இந்­தி­யா­வின் வர­லாற்­றை­யும் கலாசா­ரத்­தை­யும் அறிய வேண்­டு­மா­னால் இந்த மூன்­றை­யும் சேர்த்து ஆய்வு செய்­தால் தான் மிகச் சரி­யாக அமை­யும்,” என்­றார் சிவா.

ஒரு குறிப்­பிட்ட இனத்தை மட்­டுமே மையப்­ப­டுத்தி வர­லாற்­றைத் தொகுத்து எழு­தப் போகி­றார்­களோ என்ற சந்­தே­கம் எழு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், கொண்­டா­டப்­படும் திரா­விட இனப் பண்­பா­டு­கள் தொன்­மைச் சிறப்­பு­மிக்க தர­வு­க­ளைக் கொண்­டவை என்­றார்.

இதற்­கி­டையே மத்­திய அர­சின் கலா­சார ஆய்­வுக்­கு­ழுவை கலைக்­கக் கோரி அதி­பர் ராம்­நாத் கோவிந்­துக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடி­தம் அனுப்பி உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!