சுடச் சுடச் செய்திகள்

இந்தியாவில் வலுக்கும் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதிக்கும் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டுமென்று வலியுறுத்தி இந்தியாவெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது.

மத்திய அரசு வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றியது. மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எவ்விதப் பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டுப் பெருநிறுவனங்களையும் சார்ந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். மிக மோசமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவை கூறுகின்றன.

இந்த மசோதாக்களைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மூன்று மசோதாக்களையும் திரும்ப பெற வேண்டும் என்று பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.

விவசாய சங்கங்கள் நாடு தழுவிய அளவில் நேற்று போராட்டங்களை நடத்தின. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை முன்னெடுத்தது.

விவசாயிகளுக்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று லாரிகளும் ஓடவில்லை. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தமிழகத்திலும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது.

இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசம், டெல்லி விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா சாலையில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் குவிந்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon