மோடி: வில்லுப்பாட்டு பாரம்பரியம் வலுவடையட்டும்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கதை சொல்­லு­வது என்­பது மிக அரு­மை­யான ஒரு கலை என்­றும் தமி­ழ­கத்­தில் வில்­லுப்­பாட்டு மூலம் கதை சொல்­லும் பாரம்­ப­ரி­யம் வெகு சிறப்­பா­னது என்­றும் பிர­த­மர் நரேந்­திர மோடி புக­ழா­ரம் சூட்­டி­னார். அத்­த­கைய கலை­களை அடுத்த தலை­முறைகளி­டம் கொண்டு சேர்க்­க­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

திரு மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு பிர­த­ம­ராக பத­வி­யேற்­ற­தில் இருந்து பொது­மக்­க­ளு­டன் அகில இந்­திய வானொலி மூல­மாக ‘மன­தின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து உரை­யாற்றி வரு­கி­றார்.

இத­னை­யொட்டி நேற்று திரு மோடி பேசி­னார்.

“கதைகளின் வரலாறு மனித நாகரிகத்தைப் போலவே பழமை யானது. ஓர் ஆன்மா இருக்கும் இடத்தில் ஒரு கதை இருக்கிறது.

“நமது கிரா­மங்­க­ளின் கதை­களைக் குழந்­தை­க­ளுக்­குச் சொல்­லித்­தர வேண்­டும். நம் நாட்­டில் பல­வ­கை­யான நாட்­டுப்­பு­றக் கலை­கள் இருக்­கின்­றன.

“தமிழ்­நாடு மற்­றும் கேர­ளா­வில் கதை­கள் சொல்­லும் மிக சுவா­ர­சி­ய­மான பாணி இருக்­கிறது.

“பஞ்சதந்­திர கதை­கள் போன்­றவை இந்­தி­யா­வின் சிறப்­பான பாரம்­ப­ரி­யத்தை உணர்த்­து­கின்றன.

“சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் இந்­தியா சந்­தித்த பிரச்­சினை­க­ளைக் கதை­கள் மூலம் எடுத்­து­ரைக்க வேண்­டும்.

“சுதந்­தி­ரத்­தின் 75 ஆண்­டு­களை நாம் கொண்­டா­டப் போவ தால் வெளி­நாட்டு ஆட்­சி­யின் காலத்­தி­லி­ருந்து இடம் பெற்ற வர­லா­று­க­ளைக் கதை­க­ளாகச் சொல்­லித்­த­ரும்­படி கதை சொல்லும் கலை­ஞர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்,” என்று பிரதமர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!