கைகளை இழந்த பெண்ணுக்கு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கைகள் தானம்

கைகளை இழந்த பெண்ணுக்கு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கைகள் தானம்

2 mins read
eb6c64ba-668a-49ec-bc2f-be7e99354ba5
அறுவை சிகிச்சை நடந்து முடிந்த ஒரு மாதத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் மோனிகா. அப்போது தனக்கு புதிய கைகள் கிடைக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.படம்: ஊடகம் -

மும்பை: விபத்­தில் மூளைச்­சாவு அடைந்த சென்னை இளை­ஞ­ரின் கைகள் மும்­பை­யைச் சேர்ந்த இளம் பெண்­ணுக்கு வெற்­றி­க­ர­மாக பொருத்­தப்­பட்­டன. இதன்­மூ­லம் இரண்­டாண்­டு­க­ளுக்­குப் பிறகு அந்­தப் பெண் புது கைக­ளைப் பெற்­றுள்­ளார்.

மும்­பை­யைச் சேர்ந்த 23 வய­தான மோனிகா கடந்த 2016ஆம் ஆண்டு மின்­சார ரயி­லில் ஏற முயன்­ற­போது கீழே தவறி விழுந்து விபத்­துக்­குள்­ளா­னார். அப்­போது கல்­லூரி மாண­வி­யாக இருந்த அவர், இந்த விபத்­தால் இரு கைக­ளை­யும் இழக்க நேரிட்­டது. மருத்­து­வர்­கள் அவ­ருக்கு செயற்­கைக் கைக­ளைப் பொருத்­தி­னர். எனி­னும் இத­னால் தமக்கு முழு­மை­யான பலன் கிடைக்­க­வில்லை என்­றும் பல விஷ­யங்­க­ளுக்­காக தாம் பிற­ரைச் சார்ந்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் மோனிகா தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் கடந்த இரண்­டாண்­டு­க­ளுக்கு முன்பு உறுப்பு மாற்று அறு­வைச் சிகிச்­சைக்கு விண்­ணப்­பித்­தார் மோனிகா. ஆனால் பல மாதங்­க­ளா­கி­யும் அவ­ருக்கு சாத­க­மாக எது­வும் நடக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் சென்­னை­யைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் விபத்­தில் சிக்கி மூளைச்­சாவு அடைந்­ததை அடுத்து அவ­ரது உடல் உறுப்­பு­க­ளைத் தான­மாக வழங்க பெற்­றோர் முன்­வந்­த­னர். இதையடுத்து இளை­ஞ­ரின் கைகள் மோனி­கா­வுக்குத் தான­மாக வழங்­கப்­பட்­டது. மும்­பை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அவ்­விரு கைகளும் மோனி­கா­வுக்கு வெற்­றி­க­ர­மா­கப் பொருத்­தப்­பட்­டன. கடந்த ஒரு மாத­மாக தீவிர மருத்­து­வக் கண்­கா­ணிப்­பில் இருந்த அவர், மெல்ல இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­பு­கி­றார்.

"எனக்கு புதி­தாக கைகள் பொருத்­தப்­பட வேண்­டும் என்­பது என் தந்­தை­யின் கன­வாக இருந்­தது. எனி­னும் அது சாத்­தி­ய­மா­ன­தைக் காண அவர் இப்­போது இல்லை," என்று நெகிழ்ச்­சி­யு­டன் தெரி­வித்­துள்­ளார் மோனிகா.