ராகுல்: வேளாண் சட்டங்கள் மரண தண்டனைக்கு சமம்

மத்­திய அரசு நிறை­வேற்றி உள்ள வேளாண் சட்­டங்­க­ளுக்கு காங்­கி­ரஸ் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளது.

இந்­தச் சட்­டங்­கள் விவ­சா­யி­க­ளுக்கு மர­ண­ தண்­டனை போன்­றது என ராகுல் காந்தி தமது டுவிட்­டர் பதி­வில் விமர்­சித்­துள்­ளார்.

நாட்­டி­லுள்ள விவ­சா­யி­க­ளின் குரல் நாடா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் நசுக்­கப்­பட்­டுள்­ளது என்று அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தி­யா­வில் ஜன­நா­ய­கம் செத்­து­விட்­டது என்று குறிப்­பிட்டு, மாநி­லங்­க­ள­வை­யில் வேளாண் சட்­டங்­களை நிறை­வேற்­றி­ய­போது வாக்­கெ­டுப்பு நடத்­த­வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­கள் விடுத்த கோரிக்­கை­கள் குறித்து நாளே­டு­களில் வெளி­யான செய்­தியை அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் மத்­திய அர­சின் வேளாண் சட்­டங்­களை நிரா­க­ரிக்­கும் வகை­யில் மாநில சட்­டப்­பே­ர­வை­கள் தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டும் என காங்­கி­ரஸ் ஆளும் மாநில முதல்­வர்­களை சோனியா காந்தி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

மத்­திய அர­சின் வேளாண் சட்­டங்­களை நிரா­க­ரிக்­கும் உரிமை மாநி­லங்­க­ளுக்கு உண்டு என காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் கே.சி. வேணு­கோ­பால் தெரி­வித்­துள்­ளார்.

இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து அவை விரைவில் அறிவிக்க உள்ளன. காங்கிரஸ் தலைமையில் போராட்டம் நடக்கும் எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!