சுடச் சுடச் செய்திகள்

200 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க புனே நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்க, இந்தியாவின் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. 

இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியா உட்பட ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்காக 200 மில்லியன் ‘டோஸ்’ தடுப்பு மருந்தை அடுத்த ஆண்டுக்குள் தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 இதற்காக பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் கோவேக்ஸ் தடுப்பூசி கூட்டணி, 300 மில்லியன் அமெரிக்க டாலரை ‘சீரம்’ நிறுவனத்துக்கு வழங்கி உள்ளன. 

இந்த தடுப்பு மருந்தின் விலை அதிகபட்சமாக ஐந்து அமெரிக்க டாலர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon