பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு

கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், எஞ்சிய 32 பேர் மீதான குற்றத்தை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ தரப்பு நிரூபிக்காததால் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 26 பேர் மட்டுமே இன்று நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலையாகினர். வயது முதிர்வு காரணமாக அத்வானி (92), முரளி மனோகர் ஜோஷி (86), உடல்நலம் பாதிக்கப்பட்ட உமாபாரதி, கல்யாண் சிங், சதீஷ் பிரதான், மகந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் காணொளி வாயிலாக முன்னிலையாகினர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

தீர்ப்பு 2,000 பக்கங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றம், அயோத்தி உட்பட நாடு முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!