சுடச் சுடச் செய்திகள்

'இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 79 கொலை வழக்குகள் பதிவு'

கடந்த ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் இந்தியாவின் தேசிய குற்றப் பதிவகம் வெளியிட்ட ‘இந்தியாவில் குற்றங்கள்-2019’ எனும் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

கடந்த ஆண்டில் மொத்தம் 28,918 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அதற்கு  முந்தைய ஆண்டில் 29,017 வழக்குகள் பதிவாகியிருந்தன என்று தேசிய குற்ற ஆவணப் பதிவகம் குறிப்பிட்டது.

அதேபோல, கடந்த ஆண்டில் ஆள்கடத்தல் சம்பவங்களும் 2018 உடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது.

மொத்தம் 108,025 பேர் சம்பந்தப்பட 105,037 வழக்குகள் கடந்த ஆண்டில் பதிவாகின. அதற்கு முந்தைய ஆண்டில் 105,734 வழக்குகள் பதிவாகி இருந்தன.

கடந்த ஆண்டில் 84,921 பெண்கள், 23,104 ஆண்கள் கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 71,264 சிறுவர்களில் 15,894 பேர் பையன்கள்; 55370 பேர் சிறுமிகள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon