‘60 மில்லியன் இந்தியர்களை கிருமி தொற்றியிருக்கலாம்’

இந்­தி­யா­வில் இது­வரை 6.23 மில்­லி­யன் பேரை கொவிட்-19 தொற்றி இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அதைப்­போல பத்து மடங்கு பேருக்கு, அதா­வது 60 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்­டோரை அந்­நோய் தொற்றி இருக்­க­லாம் என இந்­திய மருத்­துவ ஆய்­வுக் கழ­கத்­தின் ஆய்வு முடி­வு கூறு­கிறது.

மக்­கள்­தொ­கை­யில் எவ்­வ­ளவு விகி­தத்­தி­னர் கிரு­மித்­தொற்­றுக்கு உள்­ளா­கி­யி­ருக்­க­லாம் என்­பதை அறி­யும் வித­மாக, இரத்தத்தில் குறிப்­பிட்ட நோயெ­திர்ப்­புப் பொருள்­கள் எவ்­வ­ளவு உள்­ளன என்­ப­தைக் கண்­ட­றி­யும் ஆய்வு நாடு முழு­­தும் நடத்­தப்­பட்­டது.

“பத்து வய­துக்கு மேற்­பட்ட 15 பேரில் ஒரு­வரை கொரோனா கிருமி தொற்­றி­யி­ருக்­க­லாம் என்­பது ஆய்­வின் மூலம் பெறப்­பட்ட முக்­கிய முடிவுகளில் ஒன்று,” என்­றார் இந்­திய மருத்­துவ ஆய்­வுக் கழ­கத்­தின் தலைமை இயக்­கு­நர் பல்­ராம் பார்­கவா.

அத்­து­டன், கிரா­மப்­ப­கு­தி­க­ளைக் காட்­டி­லும் நகர்ப்­பு­றங்­க­ளில்­தான் கிரு­மித்­தொற்று அதி­க­மாக இருந்­தி­ருப்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

ஆய்­வில் பங்­கேற்ற கிரா­ம­வா­சி­களில் 4.4 விழுக்­காட்­டி­ன­ரின் இரத்­தத்­தில் அந்­தக் குறிப்­பிட்ட நோய் எதிர்ப்­புப் பொருள்­கள் இருந்­தன. நக­ர்ப்­பு­றங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், அவ்­வி­கி­தம் சேரிப்­ப­கு­தி­களில் 15.6 விழுக்­கா­டா­க­வும் மற்ற பகு­தி­களில் 8.2 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

கடந்த ஆகஸ்ட் மாத நடுப்­பகுதி­யில் இருந்து சென்ற மாத நடுப்­ப­குதி வரை 21 மாநி­லங்­களைச் சேர்ந்த 29,000க்கு மேற்பட்ட வர்களிடம் மேற்­கொள்­ளப்­பட்ட இரத்தப் பரி­சோ­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்த முடி­வு­கள் எட்­டப்­பட்­டன.

முதன்­மு­த­லில் நடத்­தப்­பட்ட இத்­த­கைய நோயெ­திர்ப்­புப் பொருள் ஆய்­வின்­மூ­லம், கடந்த மே மாத வாக்­கில் பெரி­ய­வர்­களில் 0.73 விழுக்­காட்­டி­ன­ரைக் கிருமி தொற்றி இருந்திருக்கலாம் எனக் கணிக்­கப்­பட்­டது.

புது­டெல்லி, மும்பை ஆகிய பெரு­ந­க­ரங்­களில் நடத்­தப்­பட்ட வேறு சில ஆய்­வு­க­ளின் முடி­வு­களும், அதி­கா­ர­பூர்வ எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் கொரோனா பாதிப்பு அதி­க­ள­வில் இருந்­தி­ருக்­க­லாம் என்­ப­தையே காட்­டு­கின்­றன.

இந்­தி­யா­வில் இது­வரை கொரோனா தொற்று கார­ண­மாக 97,497 பேர் மாண்­டு­விட்­ட­னர். இன்­னும் இரு நாள்­களில் மரண எண்­ணிக்கை நூறா­யி­ரத்­தைத் தாண்­டி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!