பாலியல் விவகாரம்: மேலும் இரு பெண்களுக்குக் கொடுமை; 144 தடை, தடியடி; ராகுல் காந்தி, பிரியங்கா கைது

பாலியல் விவகாரம்: மேலும் இரு பெண்களுக்குக் கொடுமை; 144 தடை, தடியடி; ராகுல் காந்தி, பிரியங்கா கைது

2 mins read
93817934-5c8d-4929-a75a-435e32c92444
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அனுதாபம் கூறுவதற்காக ஹாத்ரஸ் செல்ல முயன்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை அதிகாரிகள் கைதுசெய்தனர். படம்: இந்திய ஊடகம் -

லக்னோ: இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் பாலியல் வன்கொடுமை செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட 19 வயது இளம்­பெண்­ணின் குடும்­பத்­தி­ன­ரைச் சந்­தித்து ஆறு­தல் கூறு­வ­தற்­காக அங்கு செல்ல முயன்ற காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராகுல் காந்தி நேற்று கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரு­டைய சகோ­த­ரி­யும் காங்­கி­ரஸ் பொதுச் செய­லா­ள­ரு­மான பிரி­யங்கா காந்­திக்­கும் ஏரா­ள­மான தொண்­டர்­க­ளுக்­கும் அனு­மதி மறுக்­கப்­பட்­டது. பிரி­யங்­கா­வும் தொண்­டர் களும் கைதா­யி­னர்.

"என்னை காவ­லர்­கள் பிடித்து தள்ளி அடித்­த­னர். நான் கீழே விழுந்து­விட்­டேன். தொண்­டர்­க­ளி­டம் கடு­மை­யாக நடந்­து­கொண்­டார்­கள், அவர்­க­ளை­யும் தடி­யால் அடித்­த­னர்," என்று ராகுல் காந்தி தெரி­வித்­தார்.

உத்தரப் பிரதேசத்தில் ஹாத்­ரஸ் என்ற மாவட்­டத்­தில் சண்ட்பா என்ற பகு­தி­யில் சென்ற மாதம் 14ஆம் தேதி பட்டியலின பதின்ம வய­துப் பெண்ணை உயர் சாதி­யி­னர் என்று கூறப்­படும் நான்கு பேர் கொடூ­ர­மான முறை­யில் பாலி­யல் வன்கொடுமை செய்து கொன்­று­விட்­ட­னர்.

அதே வேளை­யில், பால்­ராம்­பூர் என்ற ஊரில் சிலர் சேர்ந்­து­கொண்டு கூட்­டாக பாலி­யல் வன்கொடுமை செய்து வேறு ஒரு பெண்ணை கொன்று­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில், அந்த மாநி­லத்­தின் புலந்த்­ஷாக் மற்­றும் அசாம்­கர் என்ற மாவட்­டங்­களில் இரு கிரா­மங்­களில் சிறு­மி­கள் இரு­வர் பாலி­யல் வன்கொடுமைக்கு ஆளா­ன­தா­கத் தக­வல்­கள் தெரிவித்தன.

இந்த நிலை­யில், ஹாத்­ரஸ் சென்று பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் குடும்­பத்­தி­ன­ருக்கு அனு­தா­பம் கூறு­வ­தற்­காக நேற்று ராகுல், தன் சகோ­தரி மற்றும் தொண்­டர்­களு டன் காரில் புறப்­பட்­டார். ஆனால் அதற்கு முன்­பா­கவே அந்த ஊருக்கு யாரும் செல்­லக்­கூ­டாது என்று 144 தடை போடப்­பட்­டது.

ஆகை­யால் யமுனா தேசிய நெடுஞ்­சா­லை­யில் ராகுல் காந்தி வாக­னங்­களை அதி­கா­ரி­கள் தடுத்து நிறுத்­தி­னர். அதை­ய­டுத்து ராகுல் காந்­தி­யும் பிரி­யங்­கா­வும் தொண்­டர்­க­ளு­டன் நடந்தே ஹாத்­ரஸ் செல்ல முற்­பட்­ட­போது அவர்­கள் கைதாயினர்.­

பாலி­யல் கொடு­மை­களை எதிர்த்து புது­டெல்லி, கோல்­கத்தா, லக்னோ உள்­ளிட்ட பல நக­ரங்­களில் போராட்­டம் வெடித்­துள்­ளன.

ஹாத்­ரஸ் பெண்­ணின் சடலத்தை போலிஸ் அதி­கா­ரி­கள் இர­வோடு இர­வாக எரித்­து­விட்­டார்­கள். இத­னி­டையே, ஹாத்­ரஸ் பெண் பாலி­யல் வன்கொடுமைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது பிரே­தப் பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக உத்­த­ரப் பிர­தேச கூடு­தல் போலிஸ் அதி­காரி பிர­சாந்த் குமார் நேற்று தெரி­வித்­தார்.