போதைப்பொருள் விசாரணை: மேலும் 3 நடிகர்கள் சிக்குகிறார்கள்

போதைப்பொருள் விசாரணை: மேலும் 3 நடிகர்கள் சிக்குகிறார்கள்

1 mins read
870f56c1-ca22-4fa1-9899-b8526b8d96bb
சுஷாந்த் சிங், ரியா சக்ரபோர்த்தி. படம்: ஊடகம் -

இந்தி திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் மும்­பை­யில் உள்ள அவ­ரு­டைய அடுக்­கு­மா­டிக் குடி­யிருப்­பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்­கில் தொங்­கிய நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்டாா்.

இதன் தொடர்­பில் நடி­க­ரின் காத­லி­யும் நடி­கை­யு­மான ரியா சக்­க­ர­போர்த்தி மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது. இந்த வழக்கை சிபிஐ விசா­ரித்­து­வ­ரு­கிறது.

முன்­னணி பாலி­வுட் நடிகை தீபிகா படு­கோனே, சாரா அலி கான் உள்­ளிட்ட பிர­ப­லங்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், இந்த விவ­கா­ரத்­தில் மேலும் மூன்று நடி­கர்­கள் மீது குறி­வைக்­கப்­பட்டு இருப்­பதா­க­வும் வரும் நாட்­களில் அவர்­கள் விசாரிக்­கப்­ப­டக் கூடும் என்­றும் தக­வல்­கள் வெளி­யாகி இருக்­கின்­றன.

இந்தப் போதைப்பொருள் விவ­கா­ரத்­தில் ரியா சக்­க­ர­போர்த்­தியே கார­ண­கர்த்தா என்று கூறப்படுகிறது.

இத­னி­டையே, கர்­நா­ட­கத் திரைப்­ப­டத் துறை போதைப்­பொருள் விவ­கா­ரத்­தில் சிக்கி உள்ள பல நடி­கர், நடி­கை­களில் ஒரு­வ­ரான சஞ்­சனா கல்­ராணி என்பவரின் 11 வங்­கிக் கணக்­கு­கள் அம்­ப­ல­மாகி உள்ளதா­க­வும் அவை முடக்­கப்­படும் என்­றும் அதி­கா­ரி­கள் கூறினர்.