கொரோனா தொற்றால் தந்தை உயிரிழப்பு; பெண் மருத்துவரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் தலைமறைவு

கொரோனா தொற்றால் தந்தை உயிரிழப்பு; பெண் மருத்துவரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் தலைமறைவு

1 mins read
83157f14-0d4b-4e99-a483-c2f38f5648a7
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 28,000ஐ கடந்திருப்பதாகவும் இதுவரை 525 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமர் 5,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதிரிப்படம்: ஊடகம் -

அரசு மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர், ஒரு தாதி உட்பட 4 சுகாதாரப் பணியாளர்களை காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காவல் ஆய்வாளரின் 80 வயதான தந்தை கொவிட்-19 தொற்று காரணமாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் உயிரிழந்ததையடுத்து, காவல் ஆய்வாளரின் குடும்பத்தால் மருத்துவப் பணியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சண்முக சுந்தரம் எனும் அந்த காவல் ஆய்வாளர் தற்போது தலைமறைவாகி இருக்கிறார். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளாது.

சுமார் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த 80 வயது முதியவருக்கு நீரிழிவுப் பிரச்சினை இருந்ததாகவும் கொவிட்-19ஆல் ஏற்பட்ட சிக்கல்களால் நேற்று மாலை அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவரது நிலைமை மோசமடைந்ததால் அவரது கால் விரல் அகற்றப்பட்டதாக மருத்துவர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 28,000ஐ கடந்திருப்பதாகவும் இதுவரை 525 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமர் 5,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்