நான்கு நாட்டு தற்காப்பு ஏற்பாடு: இந்தியா தீவிரம்; அமைச்சர் 2 நாள் ஜப்பான் பயணம்

இந்­திய பசி­பிக் வட்­டா­ரத்­தில் சீனா­வின் செல்­வாக்கு கூடி­வ­ரும் நிலை­யில், இந்­தியா நான்கு நாட்டு தற்­காப்பு ஏற்­பாட்டை நோக்கி தன் கவ­னத்தைத் திருப்பி இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நான்கு நாடு­களும் இந்­திய பசி­பிக் வட்­டா­ரத்தைப் பாது­காப்­பான பகு­தி­யாக ஆக்­கு­வ­தற்­குச் சேர்ந்து செயல்­பட வேண்­டும் என்று இந்­தியா விரும்பு­கிறது. இந்­திய பசி­பிக் பகு­தி­யின் பாது­காப்புக் கோட்­பா­டு­க­ளுக்கு இந்த நான்கு நாடு­களும் உறுதி தெரி­வித்து இருக்­கின்­றன.

கடல்­துறை பாது­காப்பு, இணையத் தொழில்­நுட்­பங்­கள், உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள், பயங்­க­ர­வாத ஒழிப்பு, வட்­டார ஒத்­து­ழைப்பு ஆகி­யவை தொடர்­பில் இந்த 4 நாடு­களும் பொது­வான இலக்­கு­களைக் கொண்டு இருக்­கின்­றன.

ஆகை­யால் இவை நான்கும் அடங்­கிய ஒரு பாது­காப்பு ஏற்­பாடு பலமடைய வேண்­டும் என்று இந்தியா விரும்­பு­வ­தாகத் தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் கூறுகின்­றன.

இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் இரண்டு நாள் பய­ணம் மேற்­கொண்டு ஜப்­பான் செல்ல உள்ள நிலை­யில் இத்­த­க­வல்­கள் வெளி­யாகி இருக்­கின்­றன.

அமைச்­சர் ஜெய்­சங்­கர் நாளை­யும் நாளை மறு­நா­ளும் ஜப்­பா­னில் இருப்­பார் என்­றும் அவர் இந்த நான்கு நாட்டுப் பாது­காப்பு கலந்­து­ரை­யா­டல் தொடர்­பான இரண்­டா­வது அமைச்­சர்நிலைக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வார் என்­றும் இந்­தி­யா­வின் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

ஜப்­பா­னிய வெளி­யு­றவு அமைச்­ச­ரு­டன் இந்­திய அமைச்­சர் இரு தரப்பு பேச்சு நடத்­து­வார் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா நாடு­க­ளுக்கு இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல்­கள் 2017 முதல் இடம்­பெற்று வரு­கின்­றன. 2019ல் நடந்த ஐநா மாநாடு ஒன்றை­யொட்டி இந்த நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் சந்­தித்­தார்­கள்.

இந்த நான்கு நாட்டு ஏற்­பாட்டை நடப்­புக்­குக் கொண்டு வர இதர நாடு­கள் விரும்­பும் பட்­சத்­தில் இந்­தியா இதற்குத் தயா­ராக இருக்­கிறது என்று அர­சாங்க மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

இத்­த­கைய ஓர் ஏற்­பாட்டை உடைக்­கும் முயற்­சி­யாக சீனா ஜப்­பா­னு­டன் இரு தரப்பு பொரு­ளி­யல் உற­வைப் புதுப்­பித்­துக் கொள்ள முயன்று இருப்­ப­தா­க­வும் அதே­வே­ளை­யில் இந்த ஏற்­பாட்டுக்கு ஆத­ர­வாக அமெ­ரிக்கா இருப்­ப­தா­க­வும் இந்திய ஊட கங்கள் தெரிவித்துள்ளன.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ அக்­டோ­பர் 3ஆம் தேதி விடுத்த டுவிட்­டர் செய்­தி­களில், சீனா பொறுப்­பற்ற முறை­யில் நடந்­து­கொண்டு உல­கப் பொரு­ளி­ய­லுக்கு மிரட்­ட­லாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

ஜப்­பா­னிய பிர­த­மர் சுகா­வும் அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, இந்­திய தலை­வர்­க­ளு­டன் பேசி இருக்­கி­றார். அதற்­குப் பிறகு அவர் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கை­யும் தொடர்­பு­கொண்­ட­தா­க­வும் இந்த நான்கு நாட்டு ஏற்­பாட்­டிற்கு ஜப்­பா­னிய பிர­த­மர் ஆத­ரவு தெரி­வித்­த­தா­க­வும் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!