ஒருபுறம் பசி, பட்டினி; இன்னொருபுறம் 1,550 டன் தானியம் வீண்

இந்­தி­யா­வில் பொது முடக்க காலத்­தில் புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் பசி­யா­லும் பட்­டி­னி­யா­லும் மாண்­டு­கொண்­டி­ருந்த சூழ­லில் இந்­திய உண­வுக் கழக கிடங்­கு­களில் சேமித்து வைக்­கப்­பட்­டி­ருந்த 1,550 டன்­னுக்­கும் அதி­க­மாக உணவு தானி­யங்­கள் வீணா­கி­யி­ருப்­பது பெரும் அதிர்ச்­சி அளித்­துள்­ளது.

மத்­திய பயனீட்டாளர் விவ­கார அமைச்சு வெளி­யிட்ட தர­வு­க­ளின்­படி, கடந்த மே மாதத்­தில் 26 டன்­னும் ஜூன் மாதத்­தில் 1,453 டன்­னும் உணவு தானி­யங்­கள் வீணா­கின. அதற்­க­டுத்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் முறையே 41 மற்­றும் 51 டன் உணவு தானி­யங்­கள் கெட்­டுப் போயின.

இவ்­வாண்டு மார்ச்-ஏப்­ரல் மாதங்­களில் உணவு தானி­யங்­கள் எது­வும் வீணா­க­வில்லை என அமைச்­சின் தர­வு­கள் கூறு­கின்­றன.

பொது­வாக, உண­வுக் கழ­கக் கிடங்­கு­களில் உணவு தானி­யங்­கள் அறி­வி­யல் முறைப்­படி பாது­காப்­பாக சேமித்து வைக்­கப்­படும் என்­றும் புகை­மூட்­டம் போடு­தல், பூச்­சி­மருந்து தெளித்­தல் உள்­ளிட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் பின்­பற்­றப்­படும் என்­றும் அமைச்சு கூறி­யது.

இத்­தனை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டா­லும், இயற்­கைப் பேரி­டர்­க­ளா­லும் வாக­னங்­களில் எடுத்­துச் செல்­லும்­போதும் சிறிய அள­வில் உணவு தானி­யங்­கள் பயன்­ப­டுத்த முடி­யா­த­படி வீணா­க­லாம்.

ஆனால், குறிப்­பிட்ட அள­விற்­குத் தானி­யங்­கள் வீணா­னது தெரி­ய­வந்­தால், உட­ன­டி­யாக அது கவ­னத்­தில் கொள்­ளப்­படும் என்று அதி­கா­ரி­கள் கூறி­னர். அத்­த­கைய ஒவ்­வொரு நிகழ்­வும் விசா­ரிக்­கப்­பட்டு, அதற்­குக் கார­ண­மான அதி­கா­ரி­கள், அலு­வ­லர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வதா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

உணவு தானி­யங்­கள் வீணா­ன­தற்­காக 2014-18 கால­கட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 125 அதி­கா­ரி­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!