சிறு, குறு துறைகளை அழித்த மோடி அரசு: ராகுல் குற்றச்சாட்டு

பாட்­டி­யாலா: பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு விவ­சா­யி­க­ளுக்கு எதி­ராக கருப்­புச் சட்­டங்­களை இயற்­றி­யுள்­ளது என காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

அண்­மை­யில் நிறை­வேற்­றப்­பட்ட வேளாண் சட்­டங்­கள் இந்­திய விவ­சா­யி­கள் மீதான தாக்­கு­தல் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக மூன்று நாள் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள ராகுல், நேற்று பஞ்­சாப் மாநி­லத்­தில் உள்ள பாட்­டி­யாலா பகு­தி­யில் நடை­பெற்ற போராட்­டத்­தில் பங்­கேற்­றார்.

அப்­போது பேசிய அவர் , ஊர­டங்­கின்­போது மோடி அர­சாங்­கம் நாட்­டில் உள்ள சிறு தொழில்­களை நசுக்­கி­விட்­டது என்­றார்.

இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தின் முது­கெ­லும்பே சிறு மற்­றும் குறு­தொ­ழில்­கள்­தான் என்று குறிப்­பிட்ட அவர், தனது கொள்­கை­க­ளைக் கொண்டு கடந்த 6 ஆண்­டு­க­ளாக பிர­த­மர் மோடி ஏழை­கள் மீது தாக்­கு­தல் நடத்தி வரு­வ­தா­க­வும் குற்­றம்­சாட்­டி­னார்.

“உண­வுக் கொள்­மு­தல் மற்­றும் பொது விநி­யோ­கத் திட்­டத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான தேவை உள்­ளது. இந்த அமைப்பை வலுப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யும் இருக்­கிறது. உணவு தானி­யங்­க­ளைச் சேமிக்க அதிக கிடங்­கு­கள் அமைக்­கப்­பட வேண்­டும்.

“குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை உறுதி செய்­வ­தற்­கான தேவை­யும் விவ­சா­யி­க­ளுக்கு உள்­கட்­ட­மைப்பை வழங்­க­வேண்­டிய தேவை­யும் உள்­ளன,” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

மோடி அரசு இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை என்று கூறிய அவர், விவ­சா­யி­ க­ளை­யும் தொழி­லா­ளர்­க­ளை­யும் அழிக்­கும் பணி­யைத்­தான் மத்­திய அரசு செய்து வரு­வ­தா­கச் சாடி­னார்.

“பண­ம­திப்பு இழப்பு, மற்­றும் ஜிஎஸ்டி மூலம் வணி­கர்­க­ளை­யும் சிறு மற்­றும் நடுத்­தர வியா­பா­ரி­க­ளை­யும் மோடி அரசு அழித்­து­விட்­ட­தாக மேலும் சாடிய ராகுல், தற்­போது வேளாண் சட்­டங்­கள் மூலம் விவ­சா­யி­க­ளின் கழுத்­தை­யும் மோடி அறுத்து வரு­வ­தாக காட்­டத்­து­டன் குறிப்­பிட்­டார்.

“தொழி­ல­தி­பர்­க­ளாக உள்ள தனது நண்­பர்­க­ளுக்­காக மோடி அனைத்­தை­யும் செய்து வரு­கி­றார். ஆனால் அத்­தொ­ழி­ல­தி­பர்­கள் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­ வ­தில்லை.

“ சிறு, குறு, நடுத்­தர தொழில் துறை­தான் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும். ஆனால், தனது நட­வ­டிக்­கை­க­ளால் இத்­து­றை­களை அழித்­து­விட்­டார் பிர­த­மர் மோடி,” என்று ராகுல் காந்தி குற்­றம்சாட்டி­ உள்­ளார்.

முன்­ன­தா­கப் பேசிய பஞ்­சாப் முதல்­வர் அம­ரீந்­தர் சிங்­கும் வேளாண் சட்­டங்­கள் மூலம் விவ­சா­யி­க­ளுக்கு மொத்­த­மாக அநீதி இழைக்­கப்­பட்டு உள்­ளது என்­றார். நாடு முழு­வ­தும் விவ­சா­யப்­ப­ணி­கள் எவ்­வாறு நடக்­கின்­றன என்­பது மோடி அர­சுக்கு தெரி­யாது என­வும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!