இந்தியாவில் திரையரங்கை 50% பயன்படுத்த அனுமதி

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் கடந்த ஆறு மாதங்­க­ளாக மூடப்­பட்­டி­ருந்த திரை­ய­ரங்­கு­கள் வரும் 15ஆம் ேததி முதல் மீண்­டும் திறக்­கப்­பட உள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

அத்­து­டன், இந்த திரை­ய­ரங்கு களில் பின்­பற்­ற­வேண்­டிய வழிகாட்டி நெறி­மு­றை­கள் குறித்­தும் மத்­திய தக­வல், ஒளி­ப­ரப்­புத்­துறை அமைச்­சர் பிர­காஷ் ஜவ­டே­கர் நேற்று அறிக்கை வெளி­யிட்டார்.

“திரை­ய­ரங்­குக்கு வரு­வோர் அனை­வ­ருக்­கும் உடல் வெப்­ப­நிலை பரி­சோ­தனை செய்­ய­வேண்­டும், ஒவ்­வொரு காட்­சிக்­குப் பிற­கும் திரை­ய­ரங்கை கிருமி நாசினியால் சுத்­தம் செய்யவேண்­டும், சமூக இடை­வெளி விட்டு இருக்­கை­களை அமைக்க வேண்­டும்.

“50% இருக்­கை­களில் மட்­டுமே பார்­வை­யா­ளர்­களை அமர அனு மதிக்க வேண்­டும், ஓர் இருக்கை இடை­வெ­ளி­விட்டு அமரவும் முகக்­க­வ­சத்துடன் பார்­வை­யா­ளர்கள் படம்பார்க்கவும் அனுமதிக்க வேண்­டும். படம் பார்க்­கும்­போது இடை­யில் எழுந்து வெளியே செல்­லக்­கூ­டாது.

“திரை­ய­ரங்கு உள்ளே உணவு, நொறுக்­குத் தீனி விற்­கக்­கூ­டாது,” என 20 கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

கொரோனா கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊர­டங்கு உத்­த­ரவு நடப்­பில் இருந்து வரு­கிறது.

இத்­தொற்­றின் தாக்­கத்­தைப் பொறுத்து நாட்­டி­லுள்ள ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் பல தளர்­வு­களும் அறி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கொரோ­னாவை முறி­ய­டிக்க கூட்­டம் கூடு­வ­தைத் தடுப்­பது மிக முக்­கி­யம் என்­ப­தால் நீண்ட நாட் களாக மூடப்பட்டிருந்த திரையரங்கம் இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!