பாதிப்பில் இருந்து மீண்டவர், போட்டியில் வென்றார்

பாதிப்பில் இருந்து மீண்டவர், போட்டியில் வென்றார்

1 mins read
e635eb8b-b81e-4ea7-af6b-75b63afebbfe
படம்: ஊடகம் -

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 73 வயது முதி­ய­வர் ஒரு­வர் லண்­ட­னில் நடந்த மாரத்­தான் போட்­டி­யில் கலந்து கொண்டு பதக்­கங் களை வென்று, பாராட்­டு­கள் பெற்று வரு­கி­றார்.

மும்­பை­யைச் சேர்ந்த மாரத்­தான் வீரர் கம­லக் ‌ஷா ராவ்(படம்) கடந்த ஜூலை மாதம் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டார். அதன்­பின்­னர், மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி ஒரு வாரம் சிகிச்சை எடுத்­துக்­கொண்­ட­வர், இரு வாரங்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டார்.

தனது 67 வயது முதல் மாரத்­தான் போட்­டி­களில் கலந்­து­கொண்டு வரும் கம­லக்‌ஷா ராவ், கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­தால் மீண்­டும் முன்­பு­போல் ஓட­மு­டி­யுமா என்ற தயக்­கத்­து­டன் இருந்­தார். மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னை­யு­டன் தனது பயிற்­சி­யைத் தொடர்ந்­துள்­ளார் கம­லக்‌ஷா ராவ். அவ­ரது விடா­மு­யற்­சி­யால் வெற்­றிக் கனி அவ­ரது கைகளில் கிட்­டி­யுள்­ளது. கடந்­த­வா­ரம் லண்ட னில் நடந்த மாரத்­தான் போட்­டி­களில் கலந்­து­கொண்டு 7 மணி­நே­ரத்­தில் 42 கிலோ­மீட்­டர் ஓடி பதக்­கங்­க­ளைக் குவித்­துள்­ளார். ஏற்­கெ­னவே, 100 கிலோ மீட்­டர் ஓட்­டத்­தில் ஓடி­யுள்ள இவர், கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­ட­வில்லை எனில் தனது கன­வான 160 கிலோ மீட்­டர் தூரத்தை ஓடி கடந்­தி­ருப்­பேன் என்­றும் வருத்­தப்­பட்­டுள்­ளார்.