நடுவானில் பிரசவம்; விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு

நடுவானில் பிரசவம்; விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு

1 mins read
85a4842d-5694-4d5b-9683-f41651666731
விமானத்தில் பயணம் செய்த ஒரு மருத்துவரின் உதவியுடன், விமான சிப்பந்திகளின் கனிவான கவனிப்புடன் ஆண் மகவை ஈன்றெடுத்தார் அந்தத் தாய். படங்கள், காணொளி: @bcchristopher டுவிட்டர் பக்கம் -
multi-img1 of 2

டெல்லியிலிருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமானம் பறக்கத் தொடங்கிய பிறகு பிரசவ வலி ஏற்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு மருத்துவரின் உதவியுடன், விமான சிப்பந்திகளின் கனிவான கவனிப்புடன் ஆண் மகவை ஈன்றெடுத்தார் அந்தத் தாய்.

எதிர்பார்க்கப்பட்டதற்கு பல நாட்கள் முன்னதாகப் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டது.

பெங்களூரு விமான நிலையத்தில் குழந்தைக்கு பெரும் வரவேற்பை அந்த விமான நிறுவன ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விமானத்தில் பிறந்த அந்தக் குழந்தை வாழ் நாள் முழுவதும் இலவசமாகப் பயணம் செய்ய இண்டிகோ விமான நிறுவனம் அனுமதி அளித்திருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இது தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

குறிப்புச் சொற்கள்