வெளிநாட்டுப் பயண நிறுத்திவைப்பு ஏப்ரல் வரை நீடிக்கலாம்

1 mins read
1f58b460-62ef-41c4-b141-a5d5bc3e6436
படம்: ராய்ட்டர்ஸ் -

உள்­நாட்டு விமா­னப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அடுத்த 10 நாட்­களில் தொடர்ந்து அதி­க­ரித்­தால் 75% விமா­னச் சேவை­களுக்கு அனு­மதி அளிக்­கப்­படும் என விமா­னப் போக்­கு­

வ­ரத்து அமைச்­சர் ஹர்­தீப் சிங் பூரி தெரி­வித்­துள்­ளார். தற்­போது அந்த விகி­தம் 65 விழுக்­கா­டாக உள்­ளது.

உள்­நாட்டு விமா­னங்களில் பய­ணம் செய்­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. இம்­மா­தம் 2ஆம் தேதி­யும் 3ஆம் தேதி­யும் விமானப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை 1 லட்­சத்து 76 ஆயி­ர­மாக இருந்­தது. இம்­மாத இறு­திக்­குள் இது 2 லட்­ச­மாக உயர்ந்து தீபா­வ­ளி­ முதல் டிசம்­பருக்­குள் 3 லட்­சத்தை எட்­டும்," என்­றார் அவர். அதே­நே­ரம் அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் 'ஏர் பப்­பல்ஸ்' முறைப்­படி கட்­டுப்­பா­டு­க­ளுக்கு உட்­பட்டு சில நாடு­க­ளுக்கு இயக்­கப்பட்டு வரு­கின்­றன. இதே நிலை அடுத்த ஆண்டு மார்ச், ஏப்­ரல் வரை தொட­ரக்­கூ­டும் என்றும் வழக் கமான பயணம் அதுவரை நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் ஹர்­தீப் சிங் கூறி­னார்.

"எந்­த­வொரு நாடும் இன்­னும் முழு­மை­யாக அதன் எல்­லை­க­ளைத் திறக்­காத நிலை­யில் அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் எப்­போது தொடங்­கும் என்­பதை உறு­தி­யா­கக் கணிக்க இய­லாது. தடுப்பு மருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் மட்­டுமே எல்­லை­க­ளைத் திறக்க நாடு­கள் முன்­வ­ரும். அதுவரை இப்­போ­துள்­ள நிலைமையே சில மாதங்­க­ளுக்­குத் தொட­ரும்," என்­றார் அவர்.