700 சடலங்களை தகனம் செய்த துப்புரவுத் தொழிலாளி

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தைச் சேர்ந்த துப்­பு­ர­வுத் தொழி­லாளி ஒரு­வர் கடந்த சில மாதங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்த 700க்கும் மேற்­பட்­டோ­ரின் சட­லங்­க­ளைத் தக­னம் செய்­துள்­ளார்.

இது­கு­றித்த தக­வல் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யதை அடுத்து ஏரா­ள­மா­னோர் அவ­ருக்கு வாழ்த்­தும் நன்­றி­யும் தெரி­வித்­துள்­ள­னர்.

முன்னா, வயது 35, என்ற அத்­தொ­ழி­லாளி லக்­னோ­வில் குடும்­பத்­து­டன் வசிக்­கி­றார். கொவிட்-19 நோய் தொற்றி இறந்­த­வர்­க­ளைத் தக­னம் செய்­யும் பணிக்கு ஆட்­கள் தேவை என அரசு அறி­விப்பு வெளி­யா­ன­தும் லக்­னோ­வில் இருந்து முத­லில் விண்­ணப்­பித்­தது இவர்­தான். கடந்த ஏப்­ரல் மாதம் பணி­யில் அமர்த்­தப்­பட்­டது முதல் இன்று வரை ஏரா­ள­மா­னோ­ரின் உடல்­க­ளைத் தக­னம் செய்து வரு­வ­தா­கக் கூறு­கி­றார்.

தினந்­தோ­றும் இவ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் உடல்­களை மின்­ம­யா­னத்­துக்­குக் கொண்டு சென்று தக­னம் செய்­வ­து­தான் இவ­ரது பணி. கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் அரு­கில் செல்­லவே பலர் அஞ்­சும் நிலை­யில் இவர் அத்­தொற்­றால் இறந்­த­வர்­க­ளின் உடல்­க­ளைத் தின­மும் கையாள்­கி­றார். தற்­போது தினந்­தோ­றும் 12 முதல் 17 உடல்­க­ளைத் தக­னம் செய்­ய­வேண்டி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

“இந்­தப் பணி­யைச் செய்ய எங்­க­ளைப் போன்ற சிலரை கட­வுள் தேர்வு செய்­த­தாக நினைக்­கி­றேன். இதற்­காக வெட்­கப்­ப­ட­வில்லை. மேல்­நி­லைப் பள்­ளிப் படிப்பை முடித்­துள்ள எனக்கு இந்­தப் பணி­யால் சில பிரச்­சி­னை­கள் ஏற்­படும் என்­பது நன்கு தெரி­யும். எனி­னும் மன­தார இப்­ப­ணி­யைச் செய்து வரு­கி­றேன்,” என்­கி­றார் முன்னா.

கடந்த ஆறு மாதங்­க­ளாக இவர் தமது குடும்­பத்­தாரை தூரத்­தில் நிற்க வைத்­து­தான் சந்­திக்­கி­றார். தம்­மால் அவர்­க­ளுக்­குக் கிருமி தொற்­றி­வி­டக்­கூ­டாது என்­ப­தில் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக உள்­ளார்.

“நான் செய்­யும் பணிக்கு போதிய அங்­கீ­கா­ரம் கிடைக்­க­வில்லை என்ற வருத்­தம் உள்­ளது. சில சம­யம் உடல்­க­ளைத் தக­னம் செய்­வ­தில் தாம­தம் ஏற்­ப­டக்­கூடும். அதற்­காக சிலர் எங்­களை ஏசு­கி­றார்­கள். ஆனால் பதி­லுக்கு நாங்­கள் கோபப்­ப­டு­வ­தில்லை. இந்­தப் பணி­யில் ஈடு­பட்­டுள்ள அனை­வ­ருக்­கும் கோபத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான பயிற்சி அளிக்­கப்­பட்­டி­ருக்­கிறது,” என்­கி­றார் முன்னா.

கடந்த ஏப்­ரல் முதல் இது­நாள் வரை இவ­ரது குழு­வி­னர் ஒரு­நாள் கூட விடுப்பு எடுக்­க­வில்லை என்று பாராட்­டு­கி­றார் லக்னோ மாந­க­ராட்சி மண்­டல அதி­காரி திலிப்.

கொவிட்-19 நோய் தாக்கி இறந்­த­வர்­க­ளின் உடல்­களை எவ்­வாறு கையாள வேண்­டும், தனி நபர் பாது­காப்பு உடை­களை அணி­வ­தன் அவ­சி­யம் உள்­ளிட்ட பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து முன்னா மற்­றும் அவ­ரது குழு­வி­ன­ருக்கு விரி­வாக விளக்­கப்­பட்டு உரிய பயிற்­சி­யும் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!