முதியவருக்கு உதவிய சமூக வலைத்தளங்கள்

கொரோனா கிரு­மித்­தொற்­றால் வரு­மா­னத்தை இழந்து தவித்த முதி­ய­வ­ருக்கு சமூக வலைத்­த­ளங்­கள் மூலம் உத­வி­கள் குவிந்து வரு­கின்­றன.

டெல்­லி­யைச் சேர்ந்த 80 வய­தான முதி­ய­வர் காந்தா பிர­சாத், ‘பாபா கா தாபா’ என்ற பெய­ரில் சிறிய உண­வ­கம் நடத்தி வரு­கி­றார். தக­ரக் கொட்­ட­கை­யின் கீழ் இயங்­கி­வ­ரும் இந்த உண­வ­கத்தை நடத்­து­வ­தில் காந்­தா­வுக்கு அவ­ரது மனைவி பதாமி தேவி கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக உதவி செய்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லால் பிறப்­பிக்­கப்­பட்ட ஊர­டங்கை அடுத்து முதி­ய­வர் காந்­தா­வின் உண­வ­க­மும் மூடப்­பட்­டது. பின்­னர் ஊர­டங்கு விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்ட போதும் வியா­பா­ரம் பழை­ய­படி சூடு­பி­டிக்­க­வில்லை.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வருகை குறைந்­து­போ­ன­தால் வரு­மா­னம் பாதிக்­கப்­பட்­டது. இத­னால் வய­தான நிலை­யில் காந்தா, பதாமி தேவி தம்­ப­தி­யர் பெரும் தவிப்­புக்கு ஆளா­கி­னர்.

இந்­நி­லை­யில் கடந்த 7ஆம் தேதி கௌரவ் வாசன் என்ற தன்­னார்வ செய்­தி­யா­ளர் ஒரு­வர் காந்தா பிர­சாத்­தின் உண­வ­கத்­துக்கு வந்­துள்­ளார்.

உண­வ­கங்­கள், சுவை­யான உண­வு­கள் குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டு­வ­ரும் கௌரவ், முதி­ய­வர் காந்­தா­வின் உண­வ­கத்­துக்கு ஏற்­பட்­டுள்ள நிலையை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டார். இதற்கு நல்ல பலன் கிடைத்­துள்­ளது.

கண்­ணீர் விட்டு அழு­த­படி முதி­ய­வர் காந்தா தனது தற்­போ­தைய நிலை குறித்து விவ­ரிக்­கும் காணொளி பார்த்­த­வர்­களை நெகிழ வைத்­துள்­ளது.

இதை­ய­டுத்து அவ­ரது காணொளி வெளி­யான மறு­நாள் காந்­தா­வின் உண­வ­கத்­தில் ஏரா­ள­மா­னோர் குவிந்­த­னர். இதை காந்தா பிர­சாத் தம்­ப­தி­யர் கொஞ்­சம்­கூட எதிர்­பார்க்­க­வில்லை.

அன்று முதல் இவ­ரது உண­வ­கத்­தில் தயா­ரிக்­கப்­படும் அனைத்து உணவு வகை­களும் காலை­யிலே விற்­றுத் தீர்­கின்­றன.

டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால், இந்தி நடி­கர்­கள் சுனில் ஷெட்டி, ரன்­தீப் கூடா, நடி­கை­கள் சோனம் கபூர், ஸ்வரா பாஸ்­கர், ரவீணா டாண்­டன், அஸ்­வின் ரவிச்­சந்­தி­ரன் உள்­ளிட்ட கிரிக்­கெட் வீரர்­கள் போன்ற ஏரா­ள­மா­னோர் முதி­ய­வர் காந்தா பிர­சாத்­தின் காணொ­ளிப் பதிவை தங்­க­ளது சமூக வலைத்­த­ளப் பக்­கங்­களில் பகிர்ந்­துள்­ள­னர்.

மேலும் பல பிர­ப­லங்­கள் காந்­தா­வின் உண­வ­கத்­துக்கு நேரில் சென்­றும் தங்­க­ளது ஆத­ர­வைப் புலப்­ப­டுத்தி உள்­ள­னர்.

இத்­த­கைய ஆத­ர­வால் நெகிழ்ந்து போயுள்ள இத்­தம்­ப­தி­யர் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வும் தங்­க­ளு­டன் இருப்­ப­தாக உண­ரத் தோன்­று­கிறது என்று தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!