இந்தியாவில் இரண்டாவது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் இரண்டாவது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

2 mins read
b4d56a0d-50a6-4f4e-838f-d47eb88339a1
படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்­தி­யாவை கொரோனா கிரு­மித்­தொற்­றின் இரண்­டா­வது அலை டிசம்­ப­ரில் தாக்­கக்­கூ­டும் என நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் தற்­போது ஊர­டங்கு தளர்­வு­கள் அம­லுக்கு வந்­துள்­ளன. ஐரோப்­பிய நாடு­க­ளைப் போலவே ஊர­டங்கு தளர்­வு­கள் கார­ண­மாக கிரு­மித்­தொற்று பாதிப்பு இந்­தி­யா­வி­லும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது என்­பதே நிபு­ணர்­கள் விடுக்­கும் எச்­ச­ரிக்கை.

"எதிர்­வ­ரும் குளிர்­கா­லத்­தில் கொரோனா தொற்­றின் இரண்­டா­வது அலை தீவி­ர­ம­டைய அதிக வாய்ப்­புள்­ளது. தற்­போது நோயின் தாக்­கம் சற்றே குறைந்­தி­ருப்­ப­தா­கத் தோன்­றி­னா­லும் இந்­நிலை நீடிக்­கும் என்­பதை உறு­தி­யா­கக் கூற முடி­யாது," என்­கி­றார் பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்த தொற்­று­நோய் நிபு­ணர் கிரி­தர் பாபு.

இதற்­கி­டையே கடந்த ஒரு மாதத்­தில் முதன்­மு­றை­யாக கிரு­மித்­தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை ஒன்­பது லட்­சத்­துக்­கும் கீழ் வந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக சுமார் 73 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 883,185ஆக உள்­ளது. இது­வரை சுமார் 5.9 மில்­லி­யன் பேர் கொரோனா கிருமி பிடி­யி­லி­ருந்து விடு­பட்­டுள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்­டோ­ரின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 6.97 மில்­லி­ய­னாக உள்­ளது.

இந்­நி­லை­யில் பாதிப்பு பட்­டி­ய­லில் மகா­ராஷ்­டிரா தொடர்ந்து முத­லி­டத்­தில் இருப்­ப­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அம்­மா­நி­லத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 1.5 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் புதி­தாக சுமார் 12 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது.

இதே­போல் தமி­ழ­கம், கேரளா, கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து ஏறு­மு­க­மாக உள்­ளது. இது­வரை 107,416 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு பலி­யாகி உள்­ள­னர்.