சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.
ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இப்புதிய தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் அளித்துள்ளது.
இரண்டாவது பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பட்டியலில் உள்ள இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள பணம் எவ்வளவு என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
சுவிஸ் வங்கிகளிடமிருந்து இதுபோன்ற தகவல்களை இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் கோரியுள்ளன.

