தனது மகனுடன் வங்கிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த தலித் வகுப்பைச் சேர்ந்த பெண்ணைக் கடத்திய ஏழு பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது.
அத்துடன், உண்மை வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக தாயையும் மகனையும் அருகில் இருந்த குளத்திலும் தூக்கி வீசிஉள்ளனர்.
பீகார் மாநிலம், புக்ஸர் மாவட்டத்தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண், தனது ஐந்து வயது மகனுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் எதிரே வந்த கும்பல் ஒன்று, அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது மகனையும் கடத்திச் சென்று கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்த சம்பவத்தை பெண் வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையையும் குளத்தில் தூக்கி வீசினர்.
இதற்கிடைேய, 28 வயதான தனது மகளைக் காணவில்லை என்று பெண்ணின் தந்தை பக்சாரில் உள்ள முரார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
தனது மகள் தன் பேரனுடன் சனிக்கிழமை வங்கிக்குச் சென்ற தாகவும் ஆனால், அதன்பிறகு அவர்கள் திரும்பி வரவே இல்லை என்றும் தந்தை புகாரில் கூறியிருந்தார்.
அதன்பிறகு, தாய்-மகன் இருவரையும் அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகில் ஞாயிறு அதிகாலை 3 மணி அளவில் கண்டுபிடித்தனர்.
பெண்ணின் ஆறு வயது மகன் குளத்தில் மிதந்த நிலையில் காணப் பட்டதாகவும் முரார் காவல் நிலைய அதிகாரி மனோஜ் குமார் பதக் கூறினார்.
பெண்ணைக் கண்டுபிடித்த நிலையில், தனது மகள் ஏழு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் மகளின் கண் முன்னால் மகனை ஆற்றில் தூக்கி வீசிக் ெகான்றுள்ளதாகவும் பெண்ணின் தந்தை போலிசாரிடம் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்பு டைய அடையாளம் தெரிந்த இருவர் மீதும் அடையாளம் தெரியாத ஐவர் மீதும் பெண்ணின் தந்தை குற்றம்சாட்டினார்.
நீரஜ் குமார் சிங் என்ற போலிஸ் அதிகாரி கூறும்போது, "சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை சீராக உள்ளது.
"மீனா ராம், 50, என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
"பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ளார். தெளிவாக அவரால் எதுவும் பேசமுடியவில்லை.
"அவரது கணவருடன் அவர் நல்ல ஓர் உறவு முறையில் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டாக அவர் தனது பெற்றோருடன்தான் வசித்து வருகிறார்," என்று கூறினார்.

