கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட அமைச்சர் மூளையில் ரத்தக் கசிவால் உயிரிழப்பு

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட அமைச்சர் மூளையில் ரத்தக் கசிவால் உயிரிழப்பு

1 mins read
170acab8-71a6-4d7b-858a-1afae87b456c
பிகாரின் பிரான்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏவான 55 வயது வினோத் குமார் சிங், கொரோனா பாதிப்புக்காக பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். படம்: ஊடகம் -

பிகாரின் பிரான்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏவான 55 வயது வினோத் குமார் சிங், கொரோனா பாதிப்புக்காக பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து, பின்னர் வீடு திரும்பினார்.

நேற்று காலை மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்ட அவர் விமானம் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி வினோத் குமார் நேற்று மாலை உயிரிழந்தார்.

பீகார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சராக இருந்த திரு வினோத் குமாரின் மறைவுக்கு முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.