எருமையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க புதிய உத்தியைக் கையாண்ட போலிஸ்

1 mins read
8a0845f1-1e43-49c2-aee7-3f633db19d95
மாதிரிப்படம்: ஊடகம் -

உத்தரப்பிரதேச மாநிலம் கனௌச் மாவட்டத்தில் அலிநகர் பகுதியை சேர்ந்த வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா என இருவர் ஓர் எருமைக்கு உரிமைகோரி காவல்நிலையம் சென்றனர்; தன்னுடைய எருமையை மற்றவர் திருடிவிட்டதாக இருவரும் குற்றம் சாட்டினர்.

பிரச்சினைக்குத் தீர்வு காணத் திணறிய போலிசார் அந்த எருமையின் உதவியை நாடி பிரச்சினையைத் தீர்த்துள்ளனர்.

எருமையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா என இருவரையும் எதிரெதிரே நிற்க வைத்த போலிசார், எருமையைத் தம்மிடம் அழைக்குமாறு கோரினர்.

அதில் தர்மேந்திராவிடம் எருமை சென்றதும் அவர் தான் எருமையின் உண்மையான உரிமையாளர் என அறிந்து, அவரிடமே எருமையை போலிசார் ஒப்படைத்தனர்.