இவ்வாண்டு இந்தியாவுக்குப் பின்னடைவு; அடுத்த ஆண்டு முன்னேற்றம்

மொத்த தனிநபர் உள்நாட்டு உற்பத்தியைப்பொறுத்த அளவில் இந்தியா, பங்களாதேஷைவிட பின்னுக்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் இந்நிலை 2021ஆம் ஆண்டுக்குள் சரியாகி 8.1 விழுக்காடு எட்டும் என்று அனைத்துலக பண நிதியம் முன்னுரைத்துள்ளது.

வளர்ந்துவரும் பெரும்சந்தைகளில் இந்தியா, கொவிட்-19 கிருமிப்பரவலால் ஆகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மார்ச் 2021ல் நிறைவடையும் பொருளியல் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 10.3 விழுக்காடு குறையும் என்று பண நிதியத்தின் “உலகப் பொருளியல் கண்ணோட்டம்” (World Economic Outlook) அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு நேர்மாறாக பங்களாதேஷின் மொத்த தனிநபர் உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு நான்கு விழுக்காடு அதிகரிக்கும் என்கிறது அந்த அறிக்கை.

ஆயினும், ஆசியாவின் மூன்றாவது ஆகப் பெரிய பொருளில் நாடான இந்தியா, அடுத்த ஆண்டு 8.8 விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம், சீனாவுக்கு முன்னுரைக்கப்பட்ட 8.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தைவிட அதிகரிக்கும என எதிர்பார்ப்பதாக பண நிதியம் தெரிவித்தது.


அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!